Published:Updated:

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டருக்கு 'டோஸ்'

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டருக்கு 'டோஸ்'
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டருக்கு 'டோஸ்'

விருதுநகர்: சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிடாததால் கலெக்டர் ஸ்ரீஹரிகரனுக்கு கடுமையாக டோஸ் விட்டுள்ளார் தலைமைச்செயலாளர்.

சிவகாசி அருகே நாராயணபுரத்தில் உள்ள ரத்னா பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் கடந்த 28ஆம் தேதி பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் மூலப்பொருளான ‘மணி மருந்தை’ கலக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.

இதில் செல்லையா, கனி, மாரிமுத்து உள்பட 5 பேர் இறந்தனர். தங்கப்பாண்டியன், பவுனு உள்பட 7 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வழக்கமாக வெடி விபத்து நடந்த சம்பவத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிடுவதும், வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அறிந்து கொண்டு அது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது வழக்கம். ஆனால் நாராயணபுரம் வெடி விபத்து பற்றி கேள்விப்பட்டதும் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த 7 பேரின் உடல்நிலையை பார்வையிட்டார்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டருக்கு 'டோஸ்'

பிறகு மருத்துவமனைக்கு வந்த செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு விருதுநகரில் உள்ள தனது பங்களாவுக்கு திரும்பி விட்டார்.

வெடி விபத்து நடந்த இடத்துக்கு கலெக்டர் ஹரிகரன் செல்லாதது குறித்து உளவுத்துறை மூலம் விசயம் மேலிடத்துக்கு சென்றது. இதையடுத்து கலெக்டர் ஹரிகரனை தொடர்பு கொண்ட தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கடுமையாக டோஸ் விட்டாராம்.

##~~##
மேலும், சிவகாசி பட்டாசு ஆலைகளில் நடக்கும் விதிமுறை மீறல்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. எனவே உடனே அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்களை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாராம்.
இதையடுத்து, சிவகாசி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்களை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்க சிவகாசி ஆர்.டி.ஓ. ரங்கன் மற்றும் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ளன.
 
எம்.கார்த்தி
படம்:
ஆர்.எம்.முத்துராஜ்