Published:Updated:

சோமாலிய கொள்ளையர் பிடியில் இந்திய மீனவர்கள்! கண்டுகொள்ளாத மத்திய அரசு

 சோமாலிய கொள்ளையர் பிடியில் இந்திய மீனவர்கள்! கண்டுகொள்ளாத மத்திய அரசு
சோமாலிய கொள்ளையர் பிடியில் இந்திய மீனவர்கள்! கண்டுகொள்ளாத மத்திய அரசு
 சோமாலிய கொள்ளையர் பிடியில் இந்திய மீனவர்கள்! கண்டுகொள்ளாத மத்திய அரசு

தூத்துகுடி: சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் தவித்துவரும் தூத்துக்குடி டனிஸ்டனை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று அவரது உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் இன்று மனுகொடுத்து முறையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலைச் சேர்ந்த லிட்டன் மகன் டனிஸ்டன் (25). இவர் மும்பையில் உள்ள ஓ.எம்.சி.ஐ. ஷிப்பிங் கம்பெனிக்குச் சொந்தமான ‘எம்.வி.அஸ்பால்ட் வென்ஷர்’ என்ற கப்பலில் மாலுமியாக வேலைபார்த்து வந்தார். கடந்த 28.9.2010 அன்று சோமாலிய கடற்கொள்ளையரால் இந்தக் கப்பல் கடத்தப்பட்டது. 15 மாலுமிகள் அந்தக் கப்பலில் இருந்தனர். சில மாதங்களில் கப்பலும் எட்டு மாலுமிகளும் விடுதலை செய்யப்பட்டனர். டனிஸ்டன் உட்பட ஏழு மாலுமிகள் கடந்த 30 மாதங்களாக பணயக் கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். டனிஸ்டன் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து இன்று மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமாரிடம் டனிஸ்டனின் உறவினர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.

டனிஸ்டனின் சகோதரியான ஜூலிட்டி நம்மிடம், ‘‘கடந்த 30 மாதங்களாக என் தம்பியை விட்டு பிரிந்து இருக்கிறோம். கலெக்டர், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என்று பலருக்கும் மனு மூலம் கோரிக்கை வைத்து வருகிறோம். யாருமே அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் தம்பி நியாயமாக வேலைசெய்து சம்பாதிக்கத்தானே போனான். கொள்ளையா அடிக்கப்போனான். அவனை இந்த அரசாங்கமே கண்டுகொள்ளாமல் இருக்கிறதே...

 சோமாலிய கொள்ளையர் பிடியில் இந்திய மீனவர்கள்! கண்டுகொள்ளாத மத்திய அரசு

கப்பல் நிர்வாகம் எப்படியோ பேசி, கப்பலை மீட்டு சென்றுவிட்டது. அதுபோல் எட்டு நபர்களும்  மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்படாமல் இருக்கும் என் தம்பியும் மற்றவர்களும் என்ன பாவம் செய்தார்கள்? நம் இந்திய கடற்படை சோமாலியாவைச் சேர்ந்த 168 நபர்களைப் பிடித்து சிறையில் அடைத்திருக்கிறதாம். அவர்களை விட்டால், நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். அதற்கான எந்த முயற்சியும் நம் அரசாங்கம் செய்யவில்லை.

##~~##
இப்போது பெரிய அளவில் பணம் தந்தால்தான் விடுவோம் என்று சொல்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரியவில்லை. அரசாங்கம் எதுவுமே தெரியாததுபோல, மௌனமாகவே இருக்கிறது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அதற்கும் அரசு அசையவில்லை. இப்போது, ‘தம்பிக்கு உணவுக் குழாயில் பிரச்னை இருக்கிறது. உணவு சாப்பிட கஷ்டப்படுகிறான். படுத்த படுக்கையாக ஆகிவிட்டான்’ என எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் சரப்ஜித் சிங் பிணமாக வந்ததுபோலதான் என் தம்பியும் வருவானோ என்று பயமாக இருக்கிறது.
 
இதுவரை நாங்கள் சாத்விக முறைப்படி கோரிக்கை வைத்து வருகிறோம். இனிமேல் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். இதற்கு மேல் நாங்கள் சாதாரணமாக கோரிக்கை வைக்க மாட்டோம். கலெக்டர் ஆபீஸ் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தே செத்துபோவோம். அப்போதாவது இந்த அரசுக்கு எங்களின் கோரிக்கை தெரிகிறதா என்று பார்ப்போம்’’ என்றார் சூடாக.
இந்திய அரசு டனிஸ்டனை மீட்குமா?
எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்:
ஏ.சிதம்பரம்