Published:Updated:

`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்
`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

புதுக்கோட்டையில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது டீக்டையில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து அசத்தியுள்ளார்.

`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

புதுக்கோட்டை அருகே வம்பன் 4 ரோடு பகுதியில் இருக்கிறது பகவான் டீக்கடை. சிறிய ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பகவான் டீக்கடைதான் இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகளின் பசி ஆற்றுகிறது. பகவான் டீக்கடை வாடிக்கையாளர்களின் வருகையால், எந்த நேரமும் பரபரப்பாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப டீக்கடை மாஸ்டர் மற்றும் உரிமையாளர் சிவக்குமார் ஓய்வு இன்றி பம்பரமாக டீ போட்டுக் கொடுத்து வருகிறார். வழக்கமாக மாலை வேளையில் டீக்கடை மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

அவரிடம் பேசினோம். ``மாங்கனம்பட்டிதான் எனக்குச் சொந்த ஊரு. வம்பன் ரோட்டுல இப்ப 8 வருஷமா டீக்கடை நடத்திக்கிட்டு வர்றேன். பக்கத்துல வம்பன், மாஞ்சன் விடுதி, பாப்பம்பட்டி, கொத்தக்கோட்டை, மலராம்பட்டி, மாங்கனம்பட்டி, வீரடிப்பட்டி போன்ற 12 ஊர்களில் இருந்து என் கடைக்கு 260 பேர் வாடிக்கையாளர்கள். ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு சாலையில் போறவங்க, வம்பன் 4 ரோடு வந்தால், என் கடைக்கு வந்து டீக்குடிச்சிட்டுதான் போவாங்க. இத பலரும் எங்கிட்ட சொல்வாங்க.

வாடிக்கையாளரை மரியாதையாக நடத்தணும், கலப்படம் இல்லாம சுத்தமான பால், சுவையாக கொடுக்கணும், இந்த இரண்டு விஷயத்தை 8 வருஷமா நான் கடைப்பிடிக்கிறேன். எதற்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். 8 வருஷமா, பசும்பால்லதான் டீ போடுறேன். வழக்கமாக காலையில 5.30 மணிக்கு அடுப்ப பத்த வச்சா, சாயந்தரம் 5 மணிக்குக் கடையை முடிச்சிருவேன். பசும்பாலுக்குத் தீடீர்னு தட்டுப்பாடு ஏற்பட்டு கிடைக்கவில்லை என்றால், அதோட கடையை முடிச்சிக்குவேன்.

கடையைத் தொடங்கும்போது, ரூ.4-க்கு டீ கொடுத்தேன். இப்ப கொஞ்சம் விலைவாசி உயர்வால ரூ.6 ஆக்கிட்டேன். ஆனா, இன்னும் பல வருடங்களுக்கு ஏத்தவே கூடாதுன்னு இருக்கேன். என் கடைக்கு பெரும்பாலும், விவசாயிகள்தான் வாடிக்கையாளர்கள். தினமும் நம்ம டீ, வடைதான் அவங்க வயித்துப் பசியை அடக்கும். தினமும் காசு கொடுக்க மாட்டாங்க. வாங்கிட்டுப் போயிட்டு மாச, மாசம் கொடுப்பாங்க. சில சமயங்களில் அறுவடை முடிஞ்சுதான் காசு கொடுப்பாங்க. இப்ப, கஜா புயலுக்கு அப்புறம், வாடிக்கையாளர்கள் வருவது குறையல, ஆனா, விவசாயிகள் பலரும் தங்களுடைய பாதிப்புகள் குறித்தும், `இனி என்ன செய்யப்போகிறோம். டீக்குடிக்கக்கூட காசு இருக்காதே’ என்று சொல்லி எல்லாம் புலம்புவாங்க...

`நான் பண்ணது சின்னதுதான்; அரசு பெரிய முயற்சி எடுக்கணும்!’ - புதுக்கோட்டை டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

அப்பத்தான், இவங்களுக்கு நான் ஏதாவது பண்ணணும்னு முடுவு எடுத்தேன். வாடிக்கையாளர்களின் டீக் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டால் கொஞ்சமாவது அவங்க சந்தோஷப்படுவாங்களே என்றுதான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு ஆள் 40 ரூபாயில் இருந்து 2,000 ரூபாய் வரையிலும் கடன் வச்சிருந்தாங்க. பணம் காச பற்றி எல்லாம் அப்ப யோசிக்கவே இல்ல. 18.12.2018 வரையிலான டீக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து டீக்கடையில் நோட்டீஸ் ஒட்டினேன். தள்ளுபடி செய்வதாக அறிவிப்பதற்கு முன்னால அப்பா அம்மா வீட்டுல யார்கிட்டயும் சொல்லல, வீட்டுல வருத்தப்படுவாங்களோன்னு நெனச்சேன். ஆனா, அவங்களோ என்னை பாராட்டினாங்க.

வாடிக்கையாளர்களும் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்து போயிட்டாங்க. எனக்கும் ஒரே சந்தோஷம். ஒருத்தரு, துண்டு வாங்கி போத்தி விட்டுட்டாரு. `ஒண்ணும் பெரிசா சாதிக்கவில்லை அண்ணா. நீங்க கொடுக்கிற காசுலதான் நான் குடும்பம் நடத்துறேன். உங்க குடும்பம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில என் கடமை’ என்று அவர்கிட்ட சொன்னேன். எல்லாருக்கும் உள்ள மாதிரிதான் எனக்கும், பழையபடி விவசாயிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். டீக்கடைக்கு சந்தோஷத்தோட வந்து விவசாயிகள் டீ குடித்துச் செல்ல வேண்டும். விவசாயிகளைக் காப்பாற்ற நான் செய்தது சின்ன முயற்சி, அரசு பெரிய முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.