Published:Updated:

`மரபணு மாற்றப்பட்ட விதை வளர்ச்சியா?” - இயற்கையை மீட்கப் போராடும் இளைஞர்

`மரபணு மாற்றப்பட்ட விதை வளர்ச்சியா?” - இயற்கையை மீட்கப் போராடும் இளைஞர்
News
`மரபணு மாற்றப்பட்ட விதை வளர்ச்சியா?” - இயற்கையை மீட்கப் போராடும் இளைஞர்

`மரபணு மாற்றப்பட்ட விதை வளர்ச்சியா?” - இயற்கையை மீட்கப் போராடும் இளைஞர்

பூமி இன்னும் இருபது ஆண்டுகளில் மிகப்பெரிய அழிவைச் சந்திக்கப் போகிறது என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. பாரம்பர்ய மரங்களைப் பாதுகாக்க வேண்டும், அவற்றை வளர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் உடம்பில் வேப்பந்தழைகளை கட்டிக்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார் சமூக ஆர்வலர்.

மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் பாரம்பர்ய மரங்களைப் பாதுகாக்க வேண்டும், அவற்றை வளர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் சேவை இயக்கத் தலைவர் சண்முகசுந்தரம் உடம்பில் வேப்பந்தழைகளை கட்டிக்கொண்டு பாரம்பர்ய மரங்களால் ஏற்படும் பயன்கள், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது மரபணு விதைகளைத் தவிர்க்கவும் நாட்டு விதைகளைப் பயன்படுத்தவும் விவசாயிகள் முன்வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மாடித் தோட்டம் அமைத்து ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதோடு விஷமற்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது. செந்துறை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சேவை இயக்கத்தினர் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் சேவை இயக்கத் தலைவர் சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``பூமி இன்னும் இருபது ஆண்டுகள் மிகப்பெரிய அழிவைச் சந்திக்கப் போகிறது என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. அதைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்குக் கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன் நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு,

புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. புவியைக் காத்தால்தான் உயிரினங்களைக் காக்க முடியும். அதேபோல் பாரம்பர்ய மூத்தகுடி மரங்கள் எவை என்பதை அறிந்து அவற்றை வகைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் அதே போல் வளர்ச்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட மரபணு விதைகளைத் தவிர்த்து நாட்டு விதைகளைப் பயன்படுத்த வேண்டும். இதை விவசாயிகள் செய்யத்தொடங்கினால் மாற்றம் பெறமுடியும். இதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன் எனது முயற்சியால் 50 பேர் மாறியிருக்கிறார்கள். இதுவே முதல்வெற்றி தானே என்று முடித்துக்கொண்டார்.