Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மீனவக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதேபோன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து அப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி சுமார் இரண்டு ஆண்டுகளாக இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குழி, பெருமணல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் நெல்லை கலெக்டரை சந்தித்து இன்று மனு அளித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!

அந்த மனுவில், 'அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்பதால் எங்கள் பெற்றோர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜியோ-பொடால்ஸ்க் என்ற ரஷ்ய நிறுவனம் தரமற்ற உதிரி பாகங்களை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் ஊழல் செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரஷ்ய அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி குழந்தைகள் மனு-கடைகள் அடைப்பு!

இந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட உதிரி பாகங்கள் தரமாற்றதாக இருப்பதால் கூடங்குளம் அணுஉலை ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அணுமின் நிலையத்திற்கு தேவையான வால்புகள், பம்புகள், மின் கம்பிகள் போன்றவை 58 மில்லியன் டாலர் அளவுக்கு செக் குடியரசிடம் இருந்து வாங்கியிருப்பதாக அறிகிறோம். இவற்றின் தரத்தையும் சந்தேகிக்கிறோம். இதனால் கடந்த 5 மாதங்களில் 6 பேர் அணுமின் நிலைய வளாகத்தில் இறந்திருக்கிறார்கள்.

ஆகவே, பாதுகாப்பற்ற அணுமின் நிலையத்தை மூடிவிட்டு அதை மாற்று எரிசக்தி நிலையமாக உருவாக்க வேண்டும். எங்கள் வாழ்வுரிமைக்காக போராடும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது போடப்பட்ட 350க்கும் மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

##~~##
இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. பரபரப்பாக எதிர்ப்பார்க்க இந்த வழக்கில், 'பெரும்பான்மை மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது' என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதையொட்டி கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் கடந்த 2 வருடமாக போராட்டம் நடத்தப்பட்டதையொட்டி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இங்குள்ள சுற்றுப்புற கிராமங்களுக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. போராட்டக்குழுவினர் போராட்டங்கள் நடத்தும்போது, பஸ்களை தாக்கிய சம்பவமோ, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவே குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால் மீண்டும் அந்த பேருந்துகளை வழக்கம் போல் இயக்க வேண்டும் என இடிந்தகரை ஊர் கமிட்டி தலைவர் ஜான்சன் நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-ஆண்டனிராஜ்
படங்கள்:
எல்.ராஜேந்திரன்