Published:Updated:

கடல் அழகை மறைத்த கடைகளின் மேற்கூறைகள் அகற்றம்

கடல் அழகை மறைத்த கடைகளின் மேற்கூறைகள் அகற்றம்
கடல் அழகை மறைத்த கடைகளின் மேற்கூறைகள் அகற்றம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் அழகை மறைக்கும் வகையில் இருந்த கடைகளின் மேற்கூறைகள் ஆட்சியரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.

கடல் அழகை மறைத்த கடைகளின் மேற்கூறைகள் அகற்றம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நாகர்கோவிலில் நகராட்சி சார்பில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 27 கடைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி கடலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த 38 கடைகளின் மேற்கூறைகளை தேவஸ்தம் போர்டு அதிகாரிகள் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் அப்புறப்படுத்தினர்.

 
கடல் அழகை மறைத்த கடைகளின் மேற்கூறைகள் அகற்றம்

இந்த திடீர் நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கடலின் அழகை சீர்குலைக்கும் வகையில் கடைகளின் மேற்கூறைகள் தாறுமாராக அமைக்கப்பட்டிருந்ததால் மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜன் உத்தரவின் பேரில் மேற்கூறைகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

##~~##
பி.கே.ராஜகுமார்