தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் 150 ஆண்டு பழமையான புத்தகம், ஆவணங்கள் கண்டெடுப்பு (படங்கள்)

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் 150 ஆண்டு பழமையான புத்தகம், ஆவணங்கள் கண்டெடுப்பு (படங்கள்)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த அரிய புத்தகங்களும், ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவணக் காப்பகம் ஒன்று உள்ளது. இதை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் திடீரென ஆய்வு செய்தார்.
##~~## |

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், ' இந்த ஆவணம் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஈடு இணையில்லா பொக்கிஷமாக விளங்கும். இதை ரசாயன பூச்சு மூலம் புதுப்பித்து தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைத்து பாதுகாக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் அனைத்து ஆவணங்களையும் பல்வேறு பிரதிகள் எடுத்து வைக்குமாறும் கூறியுள்ளேன் என்றார்.
150 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆவணம் கிடைத்த தகவல் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
செய்தி & படங்கள்: குணசீலன்