Published:Updated:

மதுரையில் 3 கைதிகள் உள்பட 73 பேருக்கு பிளஸ்-2 ரிசல்ட் வரவில்லை

மதுரையில் 3 கைதிகள் உள்பட 73 பேருக்கு பிளஸ்-2 ரிசல்ட் வரவில்லை
மதுரையில் 3 கைதிகள் உள்பட 73 பேருக்கு பிளஸ்-2 ரிசல்ட் வரவில்லை

மதுரை: மதுரை பிளஸ்-2 தேர்வு எழுதிய, புழல் சிறையில் இருக்கும் மூன்று கைதிகள் உள்பட 73 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வராததால் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரையில் 3 கைதிகள் உள்பட 73 பேருக்கு பிளஸ்-2 ரிசல்ட் வரவில்லை

தங்களின் பிளஸ்-2 தேர்வு முடிவு இணையதளத்தில் வரவில்லை. இதனால், கல்லூரியில் விண்ணப்பிக்க முடியவில்லை. மாவட்ட கல்வித்துறை அலட்சியமாக உள்ளது, எங்கள் எதிர்காலத்துக்கு உதவுங்கள் என்று, மதுரை மாட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் முறையிட வந்தனர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 73 மாணவ, மாணவிகள். இதில் பொன்முடியார் மாநகராட்சி பள்ளியில் மட்டும் 53 மாணவர்களுக்கு தேர்வு முடிவு தெரியவில்லை.

மதுரையில் 3 கைதிகள் உள்பட 73 பேருக்கு பிளஸ்-2 ரிசல்ட் வரவில்லை

கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ்-2 ரிசல்ட்டில், இணையத்தில் பதிவு எண்ணை அடித்தால் உடனே, அந்த மாணவரின் மதிப்பெண் பட்டியல் வெளிவரும். அப்படி வரவில்லை என்றால், மாணவனின் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தும் மதுரை மாவட்டத்தில் 73 மாணவர்களுக்கு தங்கள் மதிப்பெண்களை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்கல்விக்கு கவுன்சிலிங் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

##~~##
நம்மிடம் பேசிய மாணவிகள், ‘‘ஒருத்தர், ரெண்டு பேருக்கு கம்யூட்டரில் மிஸ்டேக் வரும். இப்படி மதுரை மாவட்டத்துல மட்டும் 73 பேருக்கும், அதுவும் ஒரே பள்ளியில் 53 பேருக்கும் மிஸ்டேக் வருமா? இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து எங்களுடைய ரிசல்டையும், மதிப்பெண்ணையும் கேட்டு சொன்னார்கள். ஆனால், ரிக்கார்டாக இணையதளத்தில் வந்தால்தானே, கவுன்சிலிங்குக்கு போக முடியும். நாளாகி கொண்டிருக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள். அதனால்தான் கலெக்டரிடம் முறையிட வந்தோம்’’ என்றனர்.
இதேபோன்று மதுரை புழல் சிறையில் உள்ள ஐயப்பன், மணிகண்டன், கண்ணன் என்பவர்களும் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தனர். இவர்களுக்கும் முடிவுகள் வரவில்லை. இதையடுத்து சிறைத்துறையினர் கல்வித்துறையை தொடர்பு கேட்டிருக்கின்றனர். மற்ற மாணவர்களுக்கு இணை இயக்குனர் மூலமாக மதிப்பெண் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதுவும் செய்யப்படவில்லை என்பது அந்த மூன்று கைதிகளையும் வேதனையடையச் செய்திருக்கிறது.
செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து