மதுரையில் போதை வஸ்துக்கள் விற்பனை - அன்சுல் மிஸ்ராவிற்கு ஐந்து நாள் கெடு!


மதுரை: மதுரை மாவட்டத்தில் பான் பராக், குட்கா போன்ற போதை வஸ்துகளும் நள்ளிரவு கடந்தும் டாஸ்மாக் சரக்கும் தாராளமாய் கிடைப்பதை தடுத்து நிறுத்த கலெக்டருக்கு ஐந்து நாட்கள் கெடு வைத்திருக்கிறது மதுரை மாவட்ட ஜனதா கட்சி.
வழக்குப் போடுவதும் வாதாடுவதும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரது கட்சிக்காரர்களும் இப்போது அவர் வழியை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் இன்று மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து ஒரு மனு கொடுத்திருக்கிறார். அதில். 'பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துகளை தடைசெய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் கேரளாவில் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் அண்மையில் இவற்றிற்கு தடை விதித்திருக்கிறது. ஆனாலும், பான்பராக், குட்கா இவைகளோடு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகளும் மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு தாராளமாய் கிடைக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்தி, இந்த வஸ்துகளை விற்பனை செய்பவர்களை குண்டர் சட் டத்தில் உள்ளே தள்ள வேண்டும்' என்று கோரி இருக்கிறார் சசிகுமார்.
##~~## |