Published:Updated:

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளுக்கு சீல்: தமிழக அரசு அதிரடி

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளுக்கு சீல்: தமிழக அரசு அதிரடி
கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளுக்கு சீல்: தமிழக அரசு அதிரடி

சென்னை: கடலூர் மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாத 44 தொடக்கப் பள்ளிகளை மூட மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த பள்ளிகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் சேர்க்கையை மே மாதத்தில்தான் தொடங்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால், தனியார் பள்ளிகளோ கடந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டது. தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகள் இப்படி செயல்பட்டு வருகின்றன. இதற்கு விடிவு காலமே கிடையாது.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில்  வரும் 10ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வேன்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகள் மீது அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிமம் பெறாத வாகனங்களின் அங்கீகாரத்தையும் அதிகாரிகள் ரத்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 44 தொடக்கப் பள்ளிகளை மூட மாவட்ட கலெக்டர் கிர்லோஸ் குமார் நேற்று அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது குறித்து அப்பள்ளிகளுக்கு 4 முறை விளக்கங்கள் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அந்த பள்ளிகள் சார்பில் அளி்க்கவில்லை.

இதையடுத்து, அந்த பள்ளிகளை இன்று காலை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களை இப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பள்ளிகளில் ஏற்கனவே படிக்கும் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும், அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளிலும் சேர்க்கும்படி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.