Published:Updated:

`இதுவே இறுதி புகைப்படமாக இருக்கும்!' - வீரமரணமடையும்முன் குடும்பத்துக்கு வாட்ஸப் செய்த ராணுவ மேஜர்

`இதுவே இறுதி புகைப்படமாக இருக்கும்!' - வீரமரணமடையும்முன் குடும்பத்துக்கு வாட்ஸப் செய்த ராணுவ மேஜர்
`இதுவே இறுதி புகைப்படமாக இருக்கும்!' - வீரமரணமடையும்முன் குடும்பத்துக்கு வாட்ஸப் செய்த ராணுவ மேஜர்

கடந்த திங்கள்கிழமை காலை 7 மணிக்கு, இந்திய ராணுவ மேஜர் கேதன் சர்மாவிடமிருந்து அவரது குடும்ப வாட்ஸ்அப் குரூப்பிற்கு வந்த மெஸேஜ் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. "இதுவே என் இறுதிப் புகைப்படமாக இருக்கும்!" என்ற செய்தியுடன் அவரது புகைப்படத்தோடு அனுப்பியிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில், தெற்கு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தலையில் குண்டுதுளைத்து வீரமரணம் அடைந்தார். இந்தச் சண்டையில் தீவிரவாதி ஒருவனும் கொல்லப்பட்டான்.

`இதுவே இறுதி புகைப்படமாக இருக்கும்!' - வீரமரணமடையும்முன் குடும்பத்துக்கு வாட்ஸப் செய்த ராணுவ மேஜர்

குடும்பத்தினரின் வாட்ஸ்அப்பில் கேதன் ஷர்மா மெசேஜ் அனுப்பியபோது, அவரது மனைவி எரா ஷர்மா பதில் கொடுத்திருக்கிறார். அப்போது, அவரது மனைவியும் குழந்தை கைராவும் காசியாபாத்தில் இருந்திருக்கிறார்கள். கேதன் ஷர்மா பத்திரமாக வீடு திரும்புவார் என்று நம்பிக்கையோடு இருந்தபோது, மதியம் 3.30 மணியளவில் ராணுவ அதிகாரிகள், கேதனின் வீரமரணம் குறித்த செய்தியைக் கூறியிருக்கிறார்கள். 

32 வயதான மேஜர் கேதன் ஷர்மா, 19 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவில் சேர்ந்து நாட்டிற்காக சேவையாற்றிவந்தார். ஆனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில், முதலில் தாக்கப்பட்ட மேஜர் ராகுலை கேதான் காப்பாற்றியிருக்கிறார். அதன்பின் தொடர்ந்த சண்டையில், தலையில் குண்டடிபட்டு வீரமரணம் அடைந்துள்ளார். 

`இதுவே இறுதி புகைப்படமாக இருக்கும்!' - வீரமரணமடையும்முன் குடும்பத்துக்கு வாட்ஸப் செய்த ராணுவ மேஜர்

மேஜர் கேதனின் உடல், அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகருக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது தந்தை ரவீந்தர், தாய் உஷா. "என்னோடு தினமும் பேசுவான். அவனுடைய அம்மாவுக்கு உடல்நலமில்லாததால் நன்கு கவனித்துக்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் கூறுவான்" என்று அவரது தந்தை ரவீந்தர் கண்கலங்கியிருக்கிறார். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததாகத்தான் அவரது தாயாருக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர்தான் அவரது வீரமரணம் குறித்து கூறியுள்ளனர். மேஜர் கேதனின் 4 வயது மகள் கைராவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. "ஏன் எல்லோரும் அழுகிறார்கள், அப்பா எங்கே என்ற அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை" என்று கண்கலங்குகிறார் கேதனின் உறவினர்.