Published:Updated:

மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!

விகடன் விமர்சனக்குழு
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!

சென்னை: மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக சிதம்பரம் சப்-கலெக்டராக இருந்த எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய அன்சுல் மிஸ்ரா, வணிக வரித் துறை

##~~##
இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த லில்லி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கவர்னரின் துணை செயலாளராக இருந்த கே.விவேகானந்தன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த பிங்கலே விஜய், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக  மதுராந்தகம் சப்-கலெக்டர் ஏ.ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் காதி துறை முதன்மை செயலராக ஹர்மந்தர் சிங், நிதித்துறை செயலராக டி.உதயச்சந்திரன், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ஆணையராக ஸ்வரண் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக பிரஜேந்திர நவ்னீத், அருங்காட்சியக செயலாளராக பி.ஆர்.சம்பத்  நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.