Published:Updated:

கேரளா அரசை கண்டித்து நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்

கேரளா அரசை கண்டித்து  நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
கேரளா அரசை கண்டித்து நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
கேரளா அரசை கண்டித்து  நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்

கோவை: தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில்,ஏற்படும் கடும் காலதாமதத்தை தடுக்காத கேரள அரசை  கண்டித்து இன்று நள்ளிரவு லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கவுள்ளது.

கோவையை அடுத்த தமிழக, கேரள எல்லையான வாளையாறு பகுதியில் கேரள அரசின் சோதனை சாவடிகள் அமைந்துள்ளது. விற்பனை வரி, வணிக வரி, போக்குவரத்து சோதனை சாவடி என அங்குள்ள மூன்று சோதனை சாவடிகளில் சோதனைகளை முடித்து விட்டு செல்ல கடும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த மூன்று சோதனை சாவடிகளையும் கடந்து செல்ல 35 மணி நேரத்துக்கும் மேல் ஆவதால் சோதனை சாவடியை நவீனப்படுத்தி கூடுதல் பணியாளார்களை நியமனம் செய்ய வேண்டும் என லாரி உரிமையாளார்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனினும், கேரள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, 'இன்று நள்ளிரவு (20-7-13) முதல் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி துவங்கும்' என கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

##~~##
''வாளையாறு சோதனை சாவடியை கடந்து செல்ல பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இதை கேரள அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த காலதாமதம் காரணமாக மும்பையில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு செல்லும் சரக்குகளை குறித்த நேரத்தில் கொண்டு செல்ல முடிவதில்லை. இந்த சோதனை சாவடியை நாள் தோறும் 2,500க்கும் மேற்பட்ட லாரிகள் கடந்து செல்கிறது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக உணவு பொருட்கள், ஜவுளி பொருட்கள், உள்ளிட்ட எந்த பொருட்களும் கேரளா செல்லாது. உடனடியாக கேரள அரசு, அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் துவங்க இருப்பதால் கோவை உக்கடம் லாரி பேட்டையில் தற்போதே லாரிகளை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ச.ஜெ.ரவி