Published:Updated:

பயங்கரவாதிகளால் ஆபத்து: கூடங்குளம் அணு உலைக்கு பலத்த பாதுகாப்பு!

 பயங்கரவாதிகளால் ஆபத்து: கூடங்குளம் அணு உலைக்கு பலத்த பாதுகாப்பு!
பயங்கரவாதிகளால் ஆபத்து: கூடங்குளம் அணு உலைக்கு பலத்த பாதுகாப்பு!
 பயங்கரவாதிகளால் ஆபத்து: கூடங்குளம் அணு உலைக்கு பலத்த பாதுகாப்பு!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கேரள உளவுத்துறை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து கூடங்குளம் அணுமின் உலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

##~~##
மேலும், கூடங்குளத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இன்றும், நாளையும் கூடங்குளத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு கருதி, கூடங்குளம் கடலில் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.