Published:Updated:

மும்பையில் பஸ் ஓட்டுனர்கள் ஸ்டிரைக்; மக்கள் அவதி!

மும்பை: மும்பை நகருக்குள் ஓடும் 'பெஸ்ட்'  பஸ் டிரைவர்கள் தங்களுக்கான பணி நேரம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து, இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பொதுபோக்குவரத்து நிறுவனமான ' பெஸ்ட்'   ஓட்டுனர்களின் பணிநேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும், பணி நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவல் வெளியானதுமே, 'பெஸ்ட்' டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் சுமார் 26,000 பேர்,   இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதனால் காலையில் அலுவலகம் செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். மும்பையின் 'லைப் லைன்' ஆக கருதப்படும் புறநகர் ரயில் நிலையங்களை நகரின் பல்வேறு இடங்களிலிருந்தும் இணைப்பது 'பெஸ்ட்' பஸ் சேவைகள்தான்.

இந்நிலையில் 'பெஸ்ட்' பஸ் சேவைகள் முடங்கியதால், புறநகர் ரயில் நிலையங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த ஸ்டிரைக்கினால் ஆட்டோ மற்றும் டேக்ஸி போன்றவற்றிற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டது.

இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் மற்றும் ஓட்டுனர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.