Published:Updated:

சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்!

சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்!
சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்!
சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்!

சென்னை: கவுகாத்தி ரயில் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று சென்னை ஆட்சியர் கூறியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன், பழ.கருப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும் படி மருத்துவர்களிடம்ம் கேட்டுக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களில் ஒருவருக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் உள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர் மற்றவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை" என்றார்.