Published:Updated:

கூடங்குளம் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: நாராயணசாமி

Vikatan Correspondent

சென்னை: கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கூடங்குளத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு தேவையில்லை. நீதிமன்றத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" எனக் கூறி, சில பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளதால் அந்த கோரிக்கையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவிக்கையில், ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட உதிரி பாகம் தரமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய 15 பாதுகாப்பு நெறிமுறைகளில் 13-ஐ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கதிர்வீச்சை அளவிட 499 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலையில் மட்டுமே 7 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தற்போது அணு கழிவுகள் இல்லை" என்றார்.