Published:Updated:

மதுரையை சேர்ந்த பெண் கலெக்டர் மரணம்!

மதுரையை சேர்ந்த பெண் கலெக்டர் மரணம்!
மதுரையை சேர்ந்த பெண் கலெக்டர் மரணம்!
மதுரையை சேர்ந்த பெண் கலெக்டர் மரணம்!

மதுரை: மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் (42), ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார்.

கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீபிரியா, மதுரையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு ஹைகோர்ட் நீதிபதி டி.அரிபரந்தாமன், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீபிரியா ரெங்கராஜனின் கணவர் லஜபதிராய், ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு அகிலன்ராய் (18), கயல்ராய் (15) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.