Published:Updated:

புத்தாண்டு கொண்டாட்டம்! இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்

விகடன் விமர்சனக்குழு
புத்தாண்டு கொண்டாட்டம்! இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்
புத்தாண்டு கொண்டாட்டம்! இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்
புத்தாண்டு கொண்டாட்டம்! இதுவரை இல்லாத கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு விடுதி, கேளிக்கை விடுதி ஆகியவற்றுக்கு இதுவரை இல்லாத கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆண்டு தோறும் விபத்து மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகிறது. இதனால், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு விடுதி, கேளிக்கை விடுதி ஆகியவற்றுக்கு சென்னை காவல்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (28.12.2016) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு கூடுதல்  காவல்  ஆணையாளர் கே.சங்கர், தெற்கு மண்டல இணை ஆணையர் எஸ்.அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன் மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப்  உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 31.12.2016 அன்று இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் கிளப், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் கீழ்கண்ட வழி முறைகளை கடைபிடிக்குமாறு சென்னை பெருநகரக் காவல்துறை  கேட்டுக்கொண்டுள்ளது.

நட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகள்

* பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக  முடித்துக் கொள்ள வேண்டும்

* நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள் / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

* அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது.

* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.

* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

* நீச்சல் குளங்களை 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் 1.1.2017 அன்று காலை 6 மணிவரை மூடி வைத்திருக்க வேண்டும்.

* விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின் விபரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்க வேண்டும்.
 
* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் (Ball Rooms) Eve teasing  சம்பவங்கள் நடைபெறமால் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து  கண்காணிக்க வேண்டும். 

* நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

* ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கக்கூடாது.

* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.  மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
 
* நிர்வாகத்தினர், கேளிக்கை  நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
* விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது  சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பொதுமக்கள்

* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

* இரு சக்கர வாகனங்களில், அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

* புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் கடல் நீர் அருகே செல்லக் கூடாது.

* இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.

* விரும்பத்தகாத முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பிறர் மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.

* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.

புத்தாண்டை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட, சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை  பெருநகர காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர் முழுவதும் மேற்கொண்டுள்ளது. உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காவலர்கள் உள்ளடக்கிய வாகன ரோந்து மற்றும் வாகனச் சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் அண்ணாசாலை பகுதிகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் றாநநடiபே, சயஉiபே போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க சென்னையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த தகவல் சென்னை பெருநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.