Published:Updated:

மீனவர் கொல்லப்பட்டதில் விசாரணை துவக்கம் - இலங்கை அமைச்சர்

Vikatan Correspondent
மீனவர் கொல்லப்பட்டதில் விசாரணை துவக்கம் - இலங்கை அமைச்சர்
மீனவர் கொல்லப்பட்டதில் விசாரணை துவக்கம் - இலங்கை அமைச்சர்
மீனவர் கொல்லப்பட்டதில் விசாரணை துவக்கம் - இலங்கை அமைச்சர்

இலங்கை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறுகையில், 'இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, முழு விசாரணை துவங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கடற்படையினர் கூறுகின்றனர். தவறு நடந்திருந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. இரு நாட்டு மீனவர் பிரச்னையில் தீர்வு காண்பது அவசியம்.

இந்த விவகாரம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவைப் பாதிக்காது. இந்திய மீனவர்கள், கச்சத்தீவு திருவிழாவுக்கு வருகை தர வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை செய்யும்'  என்றார்.