Published:Updated:

மீனவர் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் - டெல்லிக்கு விரைந்த தமிழ்நாடு அரசு செயலாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மீனவர் பிரச்னை மற்றும் நீட் தேர்வு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் அளிப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

மீனவர் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் - டெல்லிக்கு விரைந்த தமிழ்நாடு அரசு செயலாளர்கள்

இதில் மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி சென்ற அவர்கள் அந்தந்த துறையைச் சேர்ந்த மத்திய அரசு செயலாளர்களைச் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமரின் முதன்மைச் செயலாளரை தமிழ்நாட்டின் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரத் துறை செயாலளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு