Published:Updated:

சென்னை எண்ணெய் நிறுவனத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பா ?

ந.பா.சேதுராமன்
சென்னை எண்ணெய் நிறுவனத்தால்  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பா ?
சென்னை எண்ணெய் நிறுவனத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பா ?

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலியில், மத்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சி.பி.சி.எல் உள்ளது. நிறுவனத்துக்குத் தேவையான கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்தில் இருந்து குழாய்மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. தற்போது, சி.பி.சி.எல் நிறுவனம், சென்னை துறைமுகத்தில் இருந்து காசிமேடு, திருவொற்றியூர், எர்ணாவூர் மற்றும்  எண்ணூர் கடற்கரை விரைவுச் சாலை வழியாகவும் புதிய குழாய்களைப் பதித்து, கச்சா எண்ணெயைக் கொண்டுசெல்லும் பணியில் இறங்கியுள்ளது.

சென்னை எண்ணெய் நிறுவனத்தால்  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பா ?


 சி.பி.சி.எல். நிறுவனத்தின் இந்தப் பணியால், திருவொற்றியூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மீனவர்கள், 'தங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கும்' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.


சி.பி.சி.எல் நிறுவன திட்டப் பிரிவு பொது மேலாளர் சுரேஷ்குமார், 'துறைமுகத்தில் இருந்து சி.பி.சி.எல்.லுக்கு 1969–ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய், குழாய்மூலம் கொண்டுவரப்படுகிறது. தற்போது உற்பத்தித்திறன் அதிகரிப்பால், துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெயை கொண்டுவரும்  குழாய்களை, 17 கி.மீ தூரத்துக்கு கடற்கரைச் சாலை அருகில் 2 மீட்டர் ஆழத்திலும், குடியிருப்புப் பகுதிகளில் 15 மீட்டர் ஆழத்திலும் பதிக்கிறோம்.  கச்சா எண்ணெய் வரும் குழாயின் மீது நவீன பாதுகாப்பு முறையில் மூன்றடுக்கில்  'பாலி எத்திலின் கோட்டிங்' செய்துள்ளோம். குழாய் செல்லும் பாதை, கணினி மூலம் 24 மணிநேரமும் பராமரிக்கப்படும்.  சுற்றுச்சூழல், மீன் வளம் போன்ற எதற்கும் இதனால் பாதிப்பு இல்லை. இந்தத் திட்டம், 100 சதவிகித பாதுகாப்புடன் செயல்பட உள்ளது' என்கிறார்.