Published:Updated:

வேதாரண்யம் அருகே இலங்கைக் கடற்படை தாக்குதல்: இரண்டு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

வேதாரண்யம் அருகே இலங்கைக் கடற்படை தாக்குதல்: இரண்டு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி
வேதாரண்யம் அருகே இலங்கைக் கடற்படை தாக்குதல்: இரண்டு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சிகள் மாறும். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வேதனைக் காட்சிகள் மட்டும் எப்போதும் மாறாது. இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரையாகிவருகின்றனர். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ என்பரை, இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றது.

வேதாரண்யம் அருகே இலங்கைக் கடற்படை தாக்குதல்: இரண்டு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி


இதையடுத்து, மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. மத்திய அரசு உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது. ஆற்காட்டுத் துறையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கட்டையால் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.