Published:Updated:

காசிமேடு துறைமுகத்தை மாற்ற முயலும் தமிழக அரசு நடவடிக்கைக்குத் தடை!

காசிமேடு துறைமுகத்தை மாற்ற முயலும் தமிழக அரசு நடவடிக்கைக்குத் தடை!
காசிமேடு துறைமுகத்தை மாற்ற முயலும் தமிழக அரசு நடவடிக்கைக்குத் தடை!

காசிமேடு மீன் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வார காலம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

காசிமேடு துறைமுகத்தை மாற்ற முயலும் தமிழக அரசு நடவடிக்கைக்குத் தடை!

காசிமேடு துறைமுகத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. அதை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசின் இந்தச் செயலுக்கு, மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. புதிதாக அமைக்கப்பட்ட இடம், துறைமுகத்திலிருத்து நீண்ட தூரத்திலுள்ளது என்று மீனவர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், 'தமிழக அரசு கட்டிய புதிய கட்டடத்தில் மீன் விற்பனை செய்வதற்கான போதுமான வசதிகள் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், காசிமேடு மீன் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு நான்கு வார காலம் இடைக்காலத் தடை விதித்தனர். இதுகுறித்து, தமிழக அரசு மற்றும் துறைமுகப் பொறுப்புக் கழகம் நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.