Published:Updated:

அமர்நாத் சம்பவம்; செய்தி வெளியிடாத பாகிஸ்தான் பத்திரிகைகள்!

அமர்நாத் சம்பவம்; செய்தி வெளியிடாத பாகிஸ்தான் பத்திரிகைகள்!
அமர்நாத் சம்பவம்; செய்தி வெளியிடாத பாகிஸ்தான் பத்திரிகைகள்!

அமர்நாத் சம்பவம்; செய்தி வெளியிடாத பாகிஸ்தான் பத்திரிகைகள்!

மர்நாத் யாத்ரீகர்கள்  கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிடாமல் தவிர்த்தன.

காஷ்மீரில் இந்திய ராணுவம் பாதுகாப்புக்காக ஏதாவது செய்தால் கூட, முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் 'டான் ' ஆங்கிலப் பத்திரிகையில் அமர்நாத் சம்பவம் குறித்து ' பிட்' செய்தி கூட இடம் பெறவில்லை. டானின் இணையத்தில் மட்டும் ஏ.எப். பி நிறுவனத்தின் செய்தி சிறியளவில் வெளியிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளான 'தி நியூஸ் இன்டர்நேஷனல்', 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' பத்திரிகைகள்  எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.

'தி நேஷன்' பத்திரிகை மட்டுமே அமர்நாத் சம்பவம் குறித்தச் செய்தியைப் பதிவு செய்திருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலச் செய்திகள் இடம் பெறும் 12வது பக்கத்தில் துணுக்குச் செய்தியாக அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட செய்தி இடம்பெற்றிருந்தது. அதேவேளையில், மும்பையில் பறக்கும் விமானத்தில் கதவைத் திறக்க முயன்ற நபர் , மும்பை போலீஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாட்டிறைச்சி உண்பவர்களைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றிய செய்திகள் பெரியளவில் இடம் பெற்றிருந்தன. 

அடுத்த கட்டுரைக்கு