Published:Updated:

கடல் ஒழுங்குமுறை அறிவிப்பாணை விவகாரம்: மீனவக் குழுவினர், மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு!

கடல் ஒழுங்குமுறை அறிவிப்பாணை விவகாரம்: மீனவக் குழுவினர், மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு!
கடல் ஒழுங்குமுறை அறிவிப்பாணை விவகாரம்: மீனவக் குழுவினர், மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு!

கடல் ஒழுங்குமுறை அறிவிப்பாணை விவகாரம்: மீனவக் குழுவினர், மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு!

                                  
டற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணைக்கு பதிலாக, புதிதாக கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டுவர மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளதை அடுத்து, அத்தகைய அறிவிப்பாணைகுறித்து நாடு முழுவதும் மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் கருத்தை கேட்டறிய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  ஹர்ஷ்வர்தனை டெல்லியில் சந்தித்து, தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ தலைமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில், தேசிய மீனவர் பேரவை (National Fisherfolk Forum) தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ மா.இளங்கோ, பேரவை நிர்வாகிகளுடன் சென்று  மத்திய விவசாய (மீன்வளத்துறை) அமைச்சர்  ராதா மோகன் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  ஹர்ஷ்வர்தன், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சாத்வி. நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட அமைச்சர்களையும் தேசிய மனித உரிமை  ஆணையம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்கள்.

வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்னையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, 155 படகுகளையும் விடுவித்தல், சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதி உதவி, சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மீது கொலைக்குற்ற நடவடிக்கைகள் ஆகியவைகுறித்து விரிவாகப் பேசினர்.

மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய தேசிய மீனவர் பேரவை குழுவினர், தேசிய மீனவர் பேரவை கோரிக்கையை ஏற்று, ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு பாரம்பர்ய மீனவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் ரூ.40 லட்சம் மானியத்துடன் புதிய திட்டம் அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்து, பிரதமர் மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தமைக்கு மத்திய அரசுக்கும், அமைச்சர்  ராதா மோகன்சிங்குக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். தேசிய மீனவர் பேரவை கோரிக்கையை ஏற்று சொத்து ஜாமீன் இல்லாமல் ஆழ்கடல் மீன்பிடிப்பு கடன், நாடு முழுவதும் 13 கடற்கரை மாநில மீனவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ள போதிலும் அதை முறையாக நடைமுறைப்படுத்த நபார்டு வங்கி, என்.சி.டி.சி மற்றும் அரசுடமை வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும், மீனவர்களை அலைக்கழிக்காமல் வங்கிகள் கடன் வழங்குவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்கள். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணைக்குப் பதிலாக கடல் மற்றும் கடற்கரை அறிவிப்பாணை கொண்டுவர முயல்வதற்கு எதிராக நாடு முழுவதும் மீனவ அமைப்புகள், கடற்கரை பாதுகாப்பில் அக்கறையுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் அமைச்சரவைக்கு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் பேரவையும் நாடு முழுவதிலும் உள்ள இணைப்பு அமைப்புகள்மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளது.
       
இதனால் புதிய அறிவிப்பாணைகுறித்து 13 கடற்கரை மாநிலங்களிலும் மாவட்டம் மற்றும் மாநிலவாரியாக மீனவர்களின் கருத்தறிய வேண்டும். தேசிய அளவிலும் மீனவ அமைப்புகளை அழைத்து கருத்து கேட்க வேண்டும். அதன் பின்னரே எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார்கள். தேசிய மீனவர் பேரவை தலைவருடன், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர். ராதாகிருஷ்ணன் எம்.பி மற்றும் மீனவப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு