Published:Updated:

“மதச்சார்பின்மையின் மறு உருவமாகத் திகழ்கிறது” - எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் முதல்வர் பேச்சு!

எஸ்ஐஇடி கல்லூரி விழா

"திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து நிறைவேற்றுகிறோம்"

“மதச்சார்பின்மையின் மறு உருவமாகத் திகழ்கிறது” - எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் முதல்வர் பேச்சு!

"திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து நிறைவேற்றுகிறோம்"

Published:Updated:
எஸ்ஐஇடி கல்லூரி விழா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி), தேசியத் தர நிர்ணயக் குழுவின் ‘A++’ தகுதி பெற்றுள்ளது. இதற்கான பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் மே 30 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.

 பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது பெண்கள் தன்னாட்சிக் கல்லூரி, தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் கீழ் (Southern Indian Educational Institution - SIET), 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். நிறுவப்பட்ட நாள் தொடங்கி சமூகத்தின் அனைத்து தரப்பு பெண்களின் முன்னேற்றத்துக்காக இக்கல்லூரி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு பல்வேறு நிலைகளில் சமூகத்துக்குப் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், தேசியத் தர நிர்ணயக் குழுவின் தகுதி நிர்ணயத்தில் 4-க்கு 3.59 CGPA-யுடன் A++ என்ற உச்ச இடத்தைக் கல்லூரி பெற்றிருக்கிறது. கல்லூரிக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடும் விதமாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்தக் கல்லூரிக்கு முன்புறம் இருக்கக் கூடிய அடுத்த தெருவில் தான் என்னுடைய வீடும் இருக்கிறது. இக்கல்லூரிக்கு நான் வருவது புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்கு வந்துதான் வாக்களிக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ஆண்களுக்கு நிறைய கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கென ஒரு கல்லூரி வேண்டும் என்ற மனஉறுதியுடன் இந்த கல்லூரியை ஆரம்பித்தவர்தான் நீதிபதி பஷீர் அகமது. கடந்த 1955-ல் அன்றைய பிரதமர் நேருவை அழைத்து அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்டது. தேசிய தர நிர்ணயக் குழுவால், A++ தரம் கொடுக்கப்பட்டுள்ளது, இக்கல்லூரியின் வெற்றிப்பாதையில் முக்கியமான மைல்கல்லாகும். இது, மறைந்த நீதிபதி பஷீர் அகமதுவின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும். கல்லூரியின் தற்போதைய தலைவர் மூஸா ரஸா, மறைந்த நீதிபதி பஷீர் அகமதுவின் மகனும் தாளாளருமான பைசூர் ரகுமான், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வெற்றியாக அமைந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 1955-ல் 173 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 7,500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 50 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். மீதியுள்ள 50 சதவிகிதத்தினர் அனைத்து மதங்களையும் சார்ந்திருக்கும் மாணவிகள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவிகள் இங்கே அதிக அளவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மதச்சார்பின்மையின் மறு உருவாமாக இந்தக் கல்லூரி திகழ்ந்துகொண்டிருப்பது மிகச் சிறப்பு, தனிச் சிறப்பாக அமைந்திருக்கிறது. கல்வியுரிமைதான் பெண்ணுரிமையின் கண் போன்றது. திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து நிறைவேற்றுகிறோம்,” என்று விழாப் பேருரை ஆற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சிறந்த பேராசிரியர் சான்றிதழ் பெறும் பர்வீன் சுல்தானா
சிறந்த பேராசிரியர் சான்றிதழ் பெறும் பர்வீன் சுல்தானா

பாராட்டு விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கல்லூரி முதல்வர் ஷானாஸ் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism