Published:Updated:

சென்னைப் பல்கலைக்கழகம்: அடிப்படை வசதிகளும், துணைவேந்தர் இல்லமும் - சர்ச்சைப் பின்னணி!

சென்னைப் பல்கலைக்கழகம்

நிதிப் பற்றாக்குறையில் பல்கலைக்கழகம் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லத்தைச் சீரமைக்க 33 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்: அடிப்படை வசதிகளும், துணைவேந்தர் இல்லமும் - சர்ச்சைப் பின்னணி!

நிதிப் பற்றாக்குறையில் பல்கலைக்கழகம் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லத்தைச் சீரமைக்க 33 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

Published:Updated:
சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளில் குறைபாடு நிலவுவதாகவும், நிதிப் பற்றாக்குறையில் பல்கலைக்கழகம் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லத்தைச் சீரமைக்க 33 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

அடிப்படை வசதி
அடிப்படை வசதி

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைகள் வசதிகள் முறையாக இல்லை. 2018-ம் ஆண்டு சில இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. பல்கலைக்கழக வளாகத்தின் சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. வளாகத் தூய்மை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கென்று பல்கலைக்கழக மின்னஞ்சல் இல்லாத நிலையில், ‘5 மாணவர்கள் இணைந்து ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்’ என்று இதற்கு தீர்வு கூறுகின்றனர். விடுதி பழுதாகிவிட்டது சீரமைக்க இருக்கிறோம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக மெரினா வளாகத்தில் இயங்கிவரும் மாணவர்கள் விடுதியில் எங்களை அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில்தான், துணைவேந்தர் வீட்டைச் சீரமைக்க 32 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஆராய்ச்சி மாணவர் ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோட்டூர்புரம் காந்திமண்டபம் சாலையில் அமைந்திருக்கும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் கடைசியாகக் குடியிருந்தவர், 2013 - 2016 காலகட்டத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஆர்.தாண்டவன். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் காலியாக இருந்த வீட்டில், அடுத்த துணைவேந்தராகப் பொறுப்பேற்ற டாக்டர் பி.துரைசாமி குடியேறவில்லை. ஆக, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் துணைவேந்தர் வீடு காலியாக இருந்திருக்கிறது. டாக்டர் எஸ்.கௌரி 21.08.2020 அன்று புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். இந்தப் பின்னணியில், ரூ.32,71,505 மதிப்பீட்டில் துணைவேந்தர் வீடு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி
துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி

இதுகுறித்து விளக்கம் பெற துணைவேந்தர் டாக்டர் கௌரியைத் தொடர்புகொண்டபோது, “முந்தைய துணைவேந்தர் இந்த வீட்டில் தங்கவில்லை என்பதால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இது பயன்பாட்டில் இல்லாமல், பராமரிப்பின்றிக் கிடந்தது. நான் துணைவேந்தராகப் பொறுப்பேற்றபோது இங்கு குடியேற முடியாத அளவுக்கு வீடு மோசமான நிலையில் இருந்தது. ‘நான் தனியாக இருந்துகொள்கிறேன்’ என்றேன். ஆனால், ‘நீங்களும் குடியேறவில்லை என்றால் வீடு கைவிடப்பட்ட நிலைக்குச் செல்லும்’ என்று சொல்லப்பட்டதால் ஆட்சிமன்றக் குழு, நிதிக்குழுவின் ஒப்புதலுடன் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டது. துணைவேந்தர் இல்லம் என்பது பல்கலைக்கழகத்தின் சொத்து, அதைச் சீரமைக்க, பழுதுபார்க்க என்ன நடவடிகைக்கள் மேற்கொள்ள வேண்டுமோ, அது முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றபடி பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. பல்கலைக்கழக இணையதளம் முதன்முறையாக முழுக்க தமிழிலும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. மேலும் தரமணியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதியிலும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மெரினா வளாக விடுதி சீரமைப்புக்கு அரசு 30 கோடி ஒதுக்கியுள்ளது. மாணவர்களின் குறைகள் தொடர்ச்சியாக கேட்டு, நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன,” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

இந்தப் பின்னணியில், மே 16 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism