Published:Updated:

`எஞ்ஜாய் எஞ்சாமி' குறித்த கவர் ஸ்டோரி... புறக்கணிக்கப்பட்ட `தெருக்குரல்' அறிவு - என்ன பிரச்னை?

❛❛என்ன குறை என்ன குறை என் செல்லப் பேராண்டிக்கு என்ன குறை?❜❜ என்று அறிவு எழுதிய வரிகளோடு, அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள். - என்ன பிரச்னை?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த மார்ச் மாதத்தில், யூடியூபில் வெளியாகி, பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல் `எஞ்ஜாய் எஞ்சாமி!' சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு எழுதி, பாடகி தீ-யோடு இணைந்து பாடிய இந்தப் பாடலுக்குச் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர்.

சுமார் 32 கோடி[ பேர் யூடியூபில் பார்த்து ரசித்த `எஞ்ஜாய் எஞ்சாமி' பாடல், 49 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
எஞ்ஜாய் எஞ்சாமி
எஞ்ஜாய் எஞ்சாமி
Twitter/@TherukuralArivu
``நான் ஸ்னோலின் பேசுறேன். உன் காதில் விழுதா?" - எப்படி இருக்கிறது `தெருக்குரல்' ஆல்பம்

இதேபோல சமீபத்தில் வெளியான `சார்பட்டா பரம்பரை' படத்தில், தெருக்குரல் அறிவு எழுதிய `நீயே ஒளி' பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தெருக்குரல் அறிவோடு இணைந்து இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியிருந்தார் ஷான் வின்சென்ட் டி பால். கனடாவைச் சேர்ந்த ராப் கலைஞர் ஷான் வின்சென்ட் இந்தப் பாடலின் ஒரு பகுதியைப் பாடியும் இருந்தார்.

இந்த இரண்டு பாடல்களையும் தயாரித்தது `மாஜா' என்கிற இன்டிபெண்டென்ட் பாடல்களை வெளியிடும் நிறுவனம். இந்த நிறுவனத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு பார்ட்னராகச் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

`நீயே ஒளி', `எஞ்ஜாய் எஞ்சாமி' இரண்டு பாடல்களும் தற்போது பேசு பொருளாகியிருக்கின்றன. மாஜா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த இரண்டு பாடல்கள் குறித்தும் சர்வதேச இசை இதழான `ரோலிங் ஸ்டோன்' பத்திரிகையின் இந்தியப் பதிப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் மாத இதழில் வெளியான அந்த கவர் ஸ்டோரியில், இரு பாடல்களையும் எழுதிய அறிவு புறக்கணிக்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

`ரோலிங் ஸ்டோன்' இதழின் அட்டைப்படத்தில் தீ, ஷான் வின்சென்ட் இருவரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தப் பாடலின் வழி தனது அரசியலைப் பேசிய அறிவின் படம் இடம்பெறவில்லை. சுமார் 1,500 வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும் அந்த கவர் ஸ்டோரியில் அறிவின் பெயர் ஒரிரு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் அறிவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

தெருக்குரல் அறிவு
தெருக்குரல் அறிவு
Twitter/@TherukuralArivu
``என்ன குறை என்ன குறை என் செல்லப் பேராண்டிக்கு என்ன குறை?'' என்று அறிவு எழுதிய வரிகளையே பதிவிட்டு, `அறிவுக்கு என்ன குறை... ஏன் ஒதுக்குகிறீர்கள்?' எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர் நெட்டிசன்கள்.
இரஞ்சித்துடன் அறிவு
இரஞ்சித்துடன் அறிவு
Twitter/@TherukuralArivu

இந்தநிலையில் அறிவுக்கு ஆதரவாக இயக்குநர் பா.இரஞ்சித், `` `நீயே ஒளி’ பாடலை எழுதியவரும், `எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடலை எழுதி, பாடியவருமான அறிவின் பெயர் மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே பொதுவெளி அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு எதிரான சவால்தான் என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா?'' என்று மாஜா, ரோலிங் ஸ்டோன் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வி.சி.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, `` `எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடல் உலகம் முழுக்கப் பல கோடிப் பேரை ஈர்த்துள்ளது. இசை அமைத்துத் தயாரித்துள்ள இசை அமைப்பாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்பாடலை எழுதிய கவிஞர் தெருக்குரல் அறிவின் பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இது அறிவுச்சுரண்டல். இதற்கான காரணத்தை சந்தோஷ் நாராயணன் விளக்குவாரா?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

`தமிழ் படம் 1', `தமிழ் படம் 2' ஆகிய படங்களின் இயக்குநர் சி.எஸ்.அமுதனும் இந்த விவகாரத்தில் தனது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், `ரோலிங் ஸ்டோன்' அட்டைப்படக் கட்டுரை விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்துவருகின்றனர்.

ரசிகர்கள் மாற்றியமைத்த `ரோலிங் ஸ்டோன்' அட்டைப்படம்
ரசிகர்கள் மாற்றியமைத்த `ரோலிங் ஸ்டோன்' அட்டைப்படம்
Twitter

நெட்டிசன்கள் சொல்வது என்ன?

``இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருப்பவர் அறிவு. அவரது பவர் ஃபுல்லான வரிகள், அது பேசும் அரசியல், கேட்டவுடன் ஒட்டிக்கொள்ளும் தன்மையோடு எழுதப்பட்டிருப்பது ஆகியவைதான் இந்தப் பாடல்களுக்கு பெரும் பலம் சேர்க்கின்றன. `அறிவு ஒதுக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்வியை மாஜா, ரோலிங் ஸ்டோன் நிறுவனத்திடம் மட்டும் கேட்கக் கூடாது. தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோரிடமும் கேட்க வேண்டும். இந்த அட்டைப் பட ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருக்கும் தீ-யும், ஷான் வின்சென்ட்டும் அறிவு புறக்கணிக்கப்பட்டதைப் பற்றிப் பேசாமல் இருப்பது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இந்த இரண்டு பாடல்களும் சாதி பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால், ரோலிங் ஸ்டோன் கவர் ஸ்டோரியில், சாதி பற்றிப் பொதுவான வகையில் ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தலித் மக்களுக்குச் சமர்ப்பிக்கும் வகையில் அறிவு எழுதியிருக்கும் வரிகளைப் பற்றிப் பேச மாஜா நிறுவனமும், ரோலிங் ஸ்டோன் நிறுவனமும் ஏன் தயங்குகின்றன?

அறிவு புறக்கணிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. `எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல விழாக்களில் தீ-யே முன்னிறுத்தப்பட்டார். ஸ்போட்டிஃபை (spotify) தளத்தில் `எஞ்ஜாயி எஞ்ஜாமி’ பாடல் ரீமிக்ஸ் செய்து வெளியிடப்பட்டது. அந்த ரீமிக்ஸ் பாடலை பாரிஸைச் சேர்ந்த டிஜே ஸ்னேக் என்பவர் ரீமிக்ஸ் செய்திருந்தார். அதில் அறிவின் குரலில் வரும் வரிகள் நீக்கப்பட்டிருந்தன. அறிவின் புகைப்படமும் ஸ்போட்டிஃபை தளத்தில் இடம்பெறவில்லை.

டைம்ஸ் ஸ்கொயரில் எஞ்ஜாயி எஞ்ஜாமி
டைம்ஸ் ஸ்கொயரில் எஞ்ஜாயி எஞ்ஜாமி
Twitter

அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் ஸ்கொயர் கட்டட விளம்பரத்தில் `எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடல் இடம்பெற்றபோது தீ, டிஜே ஸ்னேக் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றன. அந்தப் பாடல் முழுக்க முழுக்க அறிவின் முன்னோர்கள் பற்றியும், அரசியல் பற்றியும், வலி பற்றியும் பேசுகிறது. அந்தப் பாடல் புகழ்பெற்றதற்கு அறிவின் வரிகள் ஒரு முக்கியக் காரணம். அப்படியிருக்கையில், அறிவைப் புறக்கணித்திருப்பது சமூக ஒடுக்குமுறையின் வெளிப்பாடுதான்'' என்கிறார்கள்.

இந்தநிலையில் அறிவுக்கு ஆதரவாக, ரோலிங் ஸ்டோன், மாஜா நிறுவனங்களை டேக் செய்து, #WhereIsArivu என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.
அறிவு
அறிவு
`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ -  ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறது ரோலிங் ஸ்டோன் நிறுவனம். அந்தப் பதிவில், ``தீப்பொறி தமிழ் ராப்பர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் தெருக்குரல் அறிவு, `எஞ்ஜாய் எஞ்சாமி’, `நீயே ஒளி’ பாடல்களின் வரிகளை பஞ்ச்கள் நிரம்ப எழுதியவர்'' என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு