Published:Updated:

`கொரோனா விடுமுறையை பிள்ளைகள் இப்படிப் பயன்படுத்தலாம்!’ - அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் யோசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புத்தகம் வாசிப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, கதைகள் கூறுவது, கோலமிடுவது என அவரவர் விரும்புவதைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா விடுமுறையை பள்ளி மாணவர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பெற்றோர்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் வேதாரண்யத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் பள்ளி விடுமுறையை மாணவ - மாணவிகள் எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்வது என்பது பற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் வெளியிட, அது தற்போது நாகை மாவட்டத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இதுபற்றி தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். ``ஒருபுறம் தொற்றுநோய் அச்சுறுத்தலால் வெளிப் பழக்கங்கள் மற்றும் அன்றாட சூழல் மாறியுள்ளது. மறுபுறம் பிள்ளைகள் வீட்டில் இந்த 10 விடுமுறை நாள்களில் விடுமுறை நேரத்தை சரியாக செலவிட வேண்டும் என்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. பிள்ளைகளை கைப்பேசி சிறிது நேரம், தொலைக்காட்சி சிறிது நேரம் பயன்படுத்த விடுங்கள். காலையில் 10 முதல் 20 வரை பொறுமையாகத் தோப்புக்கரணம் போடச் சொல்லுங்கள். இதுவே மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். அது முடிந்ததும் 20 நிமிடம் தியானம் செய்யச் சொல்லுங்கள். பின்பு சிறிய, எளிய வீட்டு வேலைகளைச் செய்ய விடுங்கள். சைக்கிள், பைக் வண்டிகள் துடைப்பது, அவர்கள் துணிகள், புத்தகங்கள் அடுக்குவது, செடி பராமரிப்பு செய்வது, காலை மாலை வெயிலில் சிறிது நேரம் விளையாடச் செய்வது, இதனால் விட்டமின் டி கிடைக்கும்.

கொரோனா
கொரோனா

எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவு வகைகளைத் தாருங்கள். நொறுவலுக்கு பல வகை பழங்கள், இஞ்சி சேர்ந்த மோர், இளநீர், நிலக்கடலை, அவல் பொரி, வெல்லம் ஆகியவற்றைக் கொடுங்கள். புத்தகம் வாசிப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, கதைகள் கூறுவது, கோலமிடுவது என அவர்கள் விரும்புவதைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுங்கள். பெண் குழந்தைகள் வாசல் தெளித்து கோலமிடச் செய்யுங்கள். கை, கால்,முகம் கழுவப் பழக்கப்படுத்துங்கள்.

வெதுவெதுப்பான சீரகம் கலந்த நீரை அருந்த கொடுங்கள். சிறிது துளசியைச் சாப்பிடலாம். தாயம், பல்லாங்குழி, பம்பரம், பரமபதம் போன்ற சிறிய விளையாட்டுகளைக் கற்றுக்கொடுங்கள். முழு ஆண்டுத் தேர்வு வரவுள்ளதால் தினமும் 2 மணி நேரமாவது பாடங்களைப் படிக்க விடுங்கள். வெளியில் செல்லுமுன் சிறிது தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் தடவி விடுங்கள். வீடுகளுக்கு மாலையில் தினமும் சாம்பிராணி போடுங்கள். அதில் காய்ந்த வேப்பிலை, வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம்.பொது இடங்களில் செல்லும்போது, கைக்குட்டை அல்லது சட்டைப் பையில் கிருமி நாசினி எதிர்ப்பு சக்தியுள்ள பச்சை கற்பூரம், துளசி ,வெற்றிலை, கற்பூரவல்லி போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு