விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் "ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாதா? ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை ஏன் இணைக்க வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? " என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்வியை கோ-ஆபரேட்டிவ் ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்வைத்தோம். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

“ ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் அந்த அட்டைக்கு எந்தப் பொருளும் வழங்கப்படாது. தற்போது 99 சதவீத மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர் “ என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை ஏன் இணைக்க வேண்டும்?
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும். ரேஷன் வரம்புக்கு மேல் வருமானம் இருப்பதால், ரேஷனுக்குத் தகுதியற்ற நபர்களையும் அரசாங்கம் நிறுத்த முடியும். தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் எரிபொருள்/உணவு தானியங்கள் ஆகியவற்றைப் பெறுவதையும் இது உறுதி செய்யும்.

அனைத்து வீடுகளுக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருள் பெற ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களைப் போலவே, ரேஷன் கார்டும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. இருப்பினும், ஒரு நபர் தனது பங்கைவிட அதிகமாகப் பெறுவது அல்லது ரேஷனுக்குத் தகுதியற்ற நபர்கள் அதைப் பெறுவது, தகுதியான மக்களுக்குச் சேர வேண்டிய பங்கை பறிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இவற்றையெல்லாம் தடுக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் (ஆஃப்லைன்) :
1. அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு (PDS) மையம் அல்லது ரேஷன் கடைக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையின் நகல், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்.
2. உங்கள் வங்கிக் கணக்கு இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பாஸ்புக்கின் நகலைச் சமர்ப்பிக்கவும்.
3. ஆதார் அட்டை எண்ணின் நகலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் PDS கடையில் சமர்ப்பிக்கவும்.
4. ஆதார் அங்கீகாரத்திற்கான பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகைகள்) சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்பார்கள்.
5. ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
6. இரண்டு ஆவணங்களை வெற்றிகரமாக இணைத்தவுடன், இணைக்கப்பட்டது என்று மற்றொரு SMS அறிவிப்பைப் பெறுவீர்கள்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் (ஆன்லைன்) :
1. அதிகாரப்பூர்வ ஆதார் seeding application தளத்திற்குச் சென்று ‘இப்போது தொடங்கு’ (Start Now) என்பதை க்ளிக் செய்யவும்.
2. மாவட்டம், மாநிலம் உள்பட உங்கள் முழு முகவரியை உள்ளிடவும். வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து, ‘ரேஷன் கார்டு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்,
3. 'ரேஷன் அட்டை' (Ration Card) என்பதைத் தேர்வு செய்தவுடன் உங்கள் ரேஷன் அட்டை எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்யவும்,
4. படிவத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு OTP (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) அனுப்பப்படும்.
5. OTP-ஐ உள்ளிட்ட பிறகு, விண்ணப்பித்தல் வெற்றிகரமாக இருந்தது என்பதைத் திரை அறிவிப்பு உங்களுக்குத் தெரிவிக்கும்.
6. உங்கள் விண்ணப்பம் உடனடியாகச் சரிபார்க்கப்படும். வழங்கப்பட்ட விவரங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பைப் பெறுவீர்கள்.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!