Election bannerElection banner
Published:Updated:

'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' - ஹோட்டல் ரூம் விளம்பரமும் சில சம்பவங்களும்!

oyo
oyo

- ஆ.சாந்தி கணேஷ்

அன்று காதலர் தினம்.

யூடியூப் சேனல் ஒன்றில் இளம் தலைமுறையினரிடம் காதல் குறித்த வழக்கமான கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்களுடன் ஒப்பிடும்போது, 20'ஸ் கிட்ஸின் வாழ்க்கை முறை மட்டுமல்ல, காதல் அத்தியாயங்களின் தன்மைகளும் வெகுவாக மாறியிருந்ததை உணர முடிந்தது.

அதில், ஓர் இளைஞன் குறிப்பிட்ட விஷயம், சற்றே கூர்ந்து கவனிக்க வைத்தது.

"எங்களுக்கு என்னங்க பிரச்னை, 'ஓயா'ல ரூம் புக் பண்ணுவோம். ஹாயா ஒரு ட்ரிப் போயிட்டு, ரூம்ல ஜாலியா இருந்துட்டு வருவோம். ஆயிரம் ரூபாய்ல இருந்து நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ரூம் கிடைக்கும். எங்க லவ்வை டெவலப் பண்ண வேறென்ன வேணும்?!"

ரொம்ப கேஷுவலாக அந்த இளைஞன் பகிர்ந்த தகவலைக் கொஞ்சம் ஆழமாக அணுக ஆரம்பித்தேன்.

உலகளவில் மூன்றாவது பெரிய ஹோட்டல் புக்கிங் சேவை தரும் நிறுவனமான ஓயோ ரூம்ஸ் (Oyo Rooms), இந்தியாவிலும் மிகப் பெரிய அளவில் தமது பிசினஸை விரிவுபடுத்தியிருந்ததை அறிய முடிந்தது.

''வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' என்று விளம்பரப்படுத்தும் இந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குகின்றனர்

சமூக வலைதளங்களில் ஓயா ரூம்ஸ் குறித்த பதிவுகளைத் தேடிப் படித்தபோது, சுற்றுலாப் பயணிகள் தொடங்கி அடிக்கடி தொழில்முறைப் பயணம் மேற்கோள்வோர் வரை பல்வேறு தரப்பினருக்கும் இதுபோன்ற ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனங்களின் தேவை அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2U0BDWi

அதேவேளையில், பொதுவெளியில் சொல்ல முடியாத நோக்கங்களுக்காக அறைகள் எடுக்கப்படுவதும், அதன் காரணமாக பிரச்னைகளில் சிக்கிய அனுபவங்களையும் காண முடிந்தது. அதுபோன்ற அனுபவப் பதிவுகள், தங்களைப்போல் யாரும் சிக்கலில் சிக்கிவிடக் கூடாது என்ற அக்கறையில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் உணர முடிந்தது.

இதன் அடிப்படையிலும், அந்த இளைஞனின் கேஷுவல் ஸ்டேட்மென்ட் அடிப்படையிலும் விசாரிக்கத் தொடங்கியபோதுதான், இதுதொடர்பான வழக்கு விவரங்களைப் பெற்றேன்.

2019 ஜூன். கோவை, இந்துஸ்தான் அவென்யூ பகுதியில் 'சில்வர் கீ' என்ற சர்வீஸ் அப்பார்ட்மென்ட் இயங்கிவருகிறது.

ஓயோ நிறுவனத்துடன் கைகோத்திருக்கும் இதற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

''வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' என்று விளம்பரப்படுத்தும் இந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குகின்றனர். இதில் மாணவர்களும் அடக்கம்' எனக் குடியிருப்புவாசிகளும் மாதர் சங்கமும் (AIDWA) புகார் எழுப்பவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓயோ வழக்கு தொடர்ந்தது.

'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' - ஹோட்டல் ரூம் விளம்பரமும் சில சம்பவங்களும்!

2019 டிசம்பர். ஓயோ தொடர்ந்த வழக்கில், 'திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல. அவர்கள் ஒன்றாகத் தங்கக்கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அப்பார்ட்மென்ட் இயங்கத் தடையில்லை என்றது.

தொழில் வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க, 'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' என்ற அம்சத்தால், அதை விளம்பரப்படுத்தும் உத்தியால் ஓயோ ரூம்ஸ் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளும், ஏற்படுத்திவரும் மாற்றங்களும் பல.

பிரச்னைக்கு உள்ளான ஓயோ கோவை சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், 'மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்குப் போன நாளில் அங்கே ஒரு கல்லூரி மாணவரும் மாணவியும் தங்கியிருந்தாங்க. அவங்க எதிர்காலம் கருதி புத்திமதி சொல்லி அனுப்பிவெச்சாங்க அலுவலர்கள். 'சட்டப்படி தவறில்லை'ன்னு நீதிமன்றம் சொல்றதும், 'ஆதார் ஐடி சரிபார்த்துத் தான் ரூம் கொடுக்கிறோம்'னு ஓயோ சொல்றதும் சரிதான். ஆனா, இளைய சமுதாயம் அங்கே ரூம் எடுத்துத் தங்குறது சரியா? இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியலை' என்று புலம்புகிறார்கள் அந்த ஏரியா மக்கள்.

இது ஏதோ கோவையில் நடந்த விஷயம் மட்டுமே அல்ல. உலகம், இந்தியா, தமிழகம், நீங்கள் வாழும் உள்ளூர் என்று இங்கு புதிது புதிதாக திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன ஓயோ ரூம்ஸ். தங்கும் விடுதிதான் அதன் பிரதான சேவை என்றாலும், பிசினஸ், அலுவல் தரப்பினர், குடும்பங்கள் என்று அங்கு பலரும் தங்கினாலும், 'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' வகை எத்தகையது?

> '' 'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' என்ற அதன் விளம்பரம் சட்டப்படி சரிதானா?

> 'நீங்க ஒரு ரூம்ல தங்காதீங்க' என்று மாரல் போலீஸிங் செய்வதற்கும் காவல்துறைக்கு அதிகாரமிருக்கிறதா?

> இளம் தலைமுறையினரின் இதுபோன்ற போக்குகளை எப்படிப் பார்ப்பது?

> பாலியல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் எப்படி அணுகுவது?

- இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும் சிறப்புச் செய்திக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதை வாசிக்க > தாலியில்லாமல் தங்குவது தப்பா? https://www.vikatan.com/news/controversy/discussion-about-adults-staying-together-issue-controversy-coimbatore

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு