Election bannerElection banner
Published:Updated:

ஜூ.வி ஃபாலோ-அப்: நீட் ஆள்மாறாட்டம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு!

நீட் ஆள்மாறாட்டம்
நீட் ஆள்மாறாட்டம்

ஆறு மாணவர்கள் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், பத்து பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது போலீஸ். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

2019, மே மாதம் 5-ம் தேதி, மும்பை ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் நீட் தேர்வு மையத்தில் உதித்சூர்யாவுக்காகப் போலியான நபர் தேர்வு எழுதியிருக்கிறார். தேர்வு மையத்தில் கண்காணிப்பு கேமரா இருந்திருக்கும். தவிர, அந்த வளாகத்தின் பல பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்திருக்கும். அவற்றில் அவரின் உருவம் பதிவாகியிருக்கும். ஆனால், அந்த நபரை இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பத்து பேரின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி சமீபத்தில் வெளியிட்டது. இதுவரை ஆறு மாணவர்கள் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், பத்து பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது போலீஸ். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இந்த வழக்கில் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்.

ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணையின்போது...
ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணையின்போது...

- கடந்த 2019 செப்டம்பர் மாதம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித்சூர்யா பற்றிய செய்திகள் பரவத் தொடங்கின. அன்று ஆரம்பித்த நீட் விவகாரம், வழக்காக மாறி சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் முடிவு பெறாத ஒரு வழக்காகவே இது உள்ளது. இதில் விடை தெரியாத பல கேள்விகளும் மர்மங்களும் உள்ளன.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை ஒரு மாணவி மற்றும் ஐந்து மாணவர்கள், பெற்றோர் தரப்பில் ஆறு பேரும் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவர், ஒரு மாணவனின் தந்தை மற்றும் இரண்டு இடைத்தரகர்கள் சிறையில் உள்ளனர். மற்றவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளனர். "இவர்களுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்தது" என்கிறார்கள் வழக்கை உற்று கவனித்துவரும் வழக்கறிஞர்கள். அவர்களிடம் பேசினோம். விரிவாக வாசிக்க > நீட் ஆள்மாறாட்ட வழக்கு... விலகாத மர்மங்கள்! - வழக்கை நீர்த்துப்போக செய்கிறதா சி.பி.சி.ஐ.டி? https://www.vikatan.com/social-affairs/education/neet-impersonation-case-issue-feb-26-2020

பொள்ளாச்சி வழக்கு இன்றைய நிலை என்ன?

"...கைதானது ஐந்து பேர்தான். இதில் தொடர்பு டைய பலர் வெளியில் இருக்கின்றனர். வெளியான வீடியோக்களைத் தவிர மற்ற வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது மறைக்கப் பட்டுள்ளன. பொள்ளாச்சி சிறிய ஊர் என்பதால், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் இந்தக் கும்பலுடன் நட்பில் இருந்திருக்கின்றனர். ஐந்து பேரின் கைது, மற்றவர்களுக்கு பயத்தைக் கொடுத்துள்ளது. அதனால், அவர்கள் அனைவரும் சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை சிறையில் இருந்தவரை இறுக்கமாகத்தான் இருந்தனர்.

சேலம் சிறைக்கு மாற்றப்பட்டும் இதே நிலைதான் தொடர்ந்தது. ஐந்து பேரும் மாறி மாறி சண்டையும் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், குண்டாஸ் ரத்து, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் மேல்நடவடிக்கை இல்லாதது போன்ற அடுத்தடுத்த திருப்பங்கள், அவர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளன. நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் அவர்கள் டிப்டாப் உடை, தாடி, நீளமான முடி, மிடுக்கான நடை என ஜாலியாகத்தான் வருகின்றனர். இவர்கள் நீதிமன்றத்துக்கு வந்த தோரணை, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கோபத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது" என்று விரிவாகச் சொன்னார்கள்...

பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சி வழக்கு

- 2019 பிப்ரவரி 24-ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகார்தான், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முதல் புள்ளி.

2019, ஏப்ரல் 26-ம் தேதி... இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியது. மே 24-ம் தேதி, இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் மாதம் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. ‘மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அதில் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது. 2020, ஜனவரி 28-ம் தேதி ஐந்து பேருக்கும் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. கோவை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பிப்ரவரி 12-ம் தேதி, அங்கிருந்து வழக்கை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, இனி மகளிர் நீதிமன்றத்தில்தான் நடைபெறப்போகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கின் தற்போதைய நிலை குறித்து விசாரித்தோம்... அதன் விவரத்தை முழுமையாக அறிய > குண்டாஸ் ரத்து... நீதிமன்றத்துக்கு வரும் தோரணையில் கெத்து - பொள்ளாச்சி வழக்கு இன்றைய நிலை என்ன? https://www.vikatan.com/social-affairs/judiciary/current

சுப்பையா கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன?

தமிழகத்தின் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கோரசம்பவம், அப்போது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

சுப்பையா கொலை வழக்கு
சுப்பையா கொலை வழக்கு

இந்த வழக்கில் இதுவரை 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 173 ஆவணங்கள், 42 பொருள்கள், 5 நீதிமன்ற ஆவணங்கள், 6 எதிர்தரப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. பிறழ்சாட்சிகளாக எவரும் மாறவில்லை என்பதால், அரசுத் தரப்பு தெம்பாக இருக்கிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய ராஜிடம் பேசியபோது, "வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் பேச முடியாது" என்றார். பொன்னுசாமி தரப்பில் பேசியவர்கள், "இது போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்" என்று மட்டும் சொன்னார்கள்.

தமிழகத்தையே உலுக்கிய சுப்பையா கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன? வழக்கு நடைபெறும் சென்னை 1-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை வட்டமடித்தோம். - இந்த வழக்கின் பின்னணியுடன் இன்றைய நிலையையும் முழுமையாக அறிய > இரண்டேகால் ஏக்கர் நிலம்... மூன்று தலைமுறை வன்மம்... கொல்லப்பட்ட மருத்துவர்! - சுப்பையா கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன? https://www.vikatan.com/social-affairs/crime/2013-chennai-doctor-subbaiah-murder-case

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு