Published:Updated:

தலையில் காயம்... புழு.. சாலையோரத்தில் கிடந்த மூதாட்டி... நெகிழவைத்த சென்னை எஸ்.ஐ!

"இவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளீர்கள். மூன்று நாள்களுக்கு ஒரு முறை இவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை ராயப்பேட்டை பகுதியில், கொரோனா ஊரடங்கின் காரணமாக சாலையோர ஆதவற்றோருக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்தார், காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ். அப்போது, அங்கு ஒரு மூதாட்டி அழுதுகொண்டு படுத்திருப்பதைக் கண்டுள்ளார். அவரை எழுப்ப முயன்றபோது... தலையில் காயம் பட்டு, அதைச் சுற்றி ஈ மொய்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்துள்ளார். உடனே, அவருக்கு முதலுதவி அளிப்பதற்காக 'உறவுகள்' அறக்கட்டளையைச் சார்ந்த காலித் அஹமதை அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த காலித், அவர் தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், டர்பன்டைன் ஆயில் மூலம் அந்தப் புழுக்களை நீக்கி அவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.

மூதாட்டிக்கு உதவிய போலீஸ்
மூதாட்டிக்கு உதவிய போலீஸ்

இந்த மூதாட்டியைப் பற்றி அந்தப் பகுதியில் விசாரித்தபோது, இவர் பல நாள்களாகவே ராயப்பேட்டை பகுதியில் இருப்பதாகவும், இவருக்கு உணவு, ஆடைகள் போன்றவற்றை அப்பகுதி மக்களே வழங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு, தலையில் அடிபட்ட நிலையில் வலி தாங்க முடியாமல் அழுத சத்தத்தில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவ முன்வந்துள்ளனர். தலையில் அடிபட்டிருப்பதைக் கண்டு அவருக்கு முடிவெட்டியுள்ளனர். அப்போது காயத்தைக் கண்ட அவர்கள், அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

முதலுதவி அளித்த பின்னர், அவரைக் குளிப்பாட்டி, வேறு உடைகள் உடுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சிக் காப்பக உதவி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், அந்த மூதாட்டிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்.

`நாட்டின் நிலையை நாம் சிக்கலாக்கிவிட்டோம்’ - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகர் ஓப்பன் டாக்

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், "இவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளீர்கள். மூன்று நாள்களுக்கு ஒரு முறை இவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

மூதாட்டிக்கு சிகிச்சை
மூதாட்டிக்கு சிகிச்சை

பின்னர், சென்னை சௌகார்பேட்டையில் உள்ள தற்காலிக காப்பகத்தில் அனுமதித்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தானாக முன்வந்துள்ளார் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ். "காயத்தினால் வரும் வலியைவிட, யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பதே பெரும் வலி" என்பதை நமக்குப் பாடமாக உணர்த்துகிறது இந்தச் சம்பவம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு