Published:Updated:

குழந்தைகளை மகிழ்ச்சியால் மலரவைத்த விஷ் ட்ரீ பரிசுகள்!

விஷ் ட்ரீ பரிசுகள்
News
விஷ் ட்ரீ பரிசுகள்

கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி, கணவனை இழந்த பெண்களின் வாழ்வ்தாரம் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது உயிர் பவுண்டேஷன்.

கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி, கணவனை இழந்த பெண்களின் வாழ்வ்தாரம் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது உயிர் பவுண்டேஷன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தத்தெடுத்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவரும் இந்த அமைப்பு, கொரோனா காலக்கட்டத்திலும் அம்மக்களுக்கு ஏந்தலாக இருந்தது.

விஷ் ட்ரீ பரிசுகள்
விஷ் ட்ரீ பரிசுகள்

தளவராம்பூண்டி, காக்கநல்லுர், குன்னவாக்கம், ராவத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசளிக்கும் 'வி்ஷ் ட்ரீ' நிகழ்வை நடத்தியது இந்த அமைப்பு. இந்த கிராமங்களில் இந்த அமைப்பு இரவுப்பள்ளிகளையும் நடத்தி வருகிறது. அதில் படிக்கும் குழந்தைகளிடம் பேசி அவர்கள் விரும்பும் பரிசுப்பொருள்களை அறிந்து அவற்றையே வாங்கிச்சென்று குழந்தைகளுக்குத் தந்து அசத்தினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தளவராம்பூண்டி பகுதியில் நடந்த நிகழ்வில், சமுதாயப்பணியியல் முதுகலை மாணவிகள் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல், முதலுதவி ஆகியவற்றைக் கற்றுத்தந்தார்கள். பிறகு குழந்தைகள் விரும்பிய பரிசுகளை வழங்க, அவர்களின் முகம் வியப்பில் விரிந்தது. குடும்பத்தினரும் மகிழ்ந்தார்கள்.

விஷ் ட்ரீ பரிசுகள்
விஷ் ட்ரீ பரிசுகள்

"போன மாசமே எங்ககிட்ட என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க. விஷ் ட்ரீன்னு ஒரு பேப்பர்ல மரம் செஞ்சு அதுல எங்களுக்கு தேவையான பரிசை எழுதி ஓட்டி வெச்சோம். நாங்க கேட்ட பரிசெல்லாம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு" என்றபடி தான் விரும்பிய பார்பி பொம்மையை அணைத்துக்கொண்டாள் ஒரு சிறுமி.


"இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இருளர் பழங்குடி மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடமே போவதில்லை. அவர்களுக்கு கல்வியின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இதுமாதிரியான பணிகளை மேற்கொள்கிறோம். இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் எதுவும் ஈடாகாது..." என்றார் உயிர் பவுண்டேஷனைச் சேர்ந்த எஸ்தர்.