Published:Updated:

அல்பேனியாவில் பிறந்தவருக்கு இந்தியாவின் பாரதரத்னா கிடைத்த கதை| இன்று, ஒன்று, நன்று - 25

அன்னை தெரசா

யாரையெல்லாம் இந்த சமூகம் புறக்கணித்ததோ, மனி்தர்களாகக்கூட பார்க்க மறுத்ததோ அவர்களையெல்லாம் தன் பிள்ளைகளாக்கி, அவர்களின் அன்னையானார்.

அல்பேனியாவில் பிறந்தவருக்கு இந்தியாவின் பாரதரத்னா கிடைத்த கதை| இன்று, ஒன்று, நன்று - 25

யாரையெல்லாம் இந்த சமூகம் புறக்கணித்ததோ, மனி்தர்களாகக்கூட பார்க்க மறுத்ததோ அவர்களையெல்லாம் தன் பிள்ளைகளாக்கி, அவர்களின் அன்னையானார்.

Published:Updated:
அன்னை தெரசா

வரலாற்றில் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு செய்தியை ரொம்ப அழுத்தமா சொல்லிட்டு போகும். சனவரி-25 அப்படி ரொம்பவே முக்கியமான ஒரு தினம். வெண்ணிற உடை-ல தோல்கள் சுருங்கி மெலிதான புன்னகையுடனும், கைகூப்பி வணக்கம் சொன்னபடி, குழந்தைகளை கொஞ்சியபடி-னு வெவ்வேறு சித்திரங்களா நமக்கு பதிஞ்சுபோன அன்னை தெரசாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட நாள் ஜனவரி-25.

அன்னை தெரசா
அன்னை தெரசா

பாரத ரத்னா - இந்திய விருதுகளிலேயே மிக உயரிய விருது. அந்த விருது அன்னை தெரசாவுக்கு கொடுத்ததுல மிக முக்கியமா கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இருக்கு. பாரத ரத்னா விருதை அன்னைத் தெரசா வாங்குறதுக்கு முந்தைய வருஷஙகள்ல வாங்கின எல்லோருமே பிறப்பாலயே இந்தியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனா, அன்னைத் தெரசா பிறப்பால இந்தியர் கிடையாது. மேலும், அவங்க எல்லோருமே ஏதோ ஒருவிதத்துல விடுதலை போராட்டத்துல பங்கெடுத்தவங்களா இருந்தாங்க. இல்லைனா இந்திய அரசுப் பணிகள்ல இருந்தாங்க. அறிவியலாளர்கள், பொறியாளர்கள் இப்படி ஏதாவது ஒரு பணியில இருந்தங்க. தோண்டு கேசவ் கார்வேங்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் மட்டும்தான் அந்த பட்டியல்ல சமூக சீர்திருத்தவாதி.

ஆனால், தொண்டுக்காக, சக மனிதரை எந்த பாகுபாடுமில்லாம அணைந்து வாரி வாஞ்சையாக சேர்ந்துக் கொண்டு தாயுள்ளத்துக்காகவே பாரத ரத்னா வழங்கப்பட்டது அன்னை தெரசாவுக்குதான். `அன்பின் பணியாளர்'னு சொல்லி விருது அன்னை தெரசாவுக்கு ஒரு நம் அரசு விருது வழங்குன நாள் வரலாற்றுல ரொம்பவே முக்கியமானது.

அன்னை தெரசா
அன்னை தெரசா

உலக வரைபடத்தில் நாடுகளுக்கிடையில் வரையபப்பட்ட எல்லைக் கோடுகளை எல்லாம் அன்பு கொண்டு துடைத்தெறிந்து, கண்ட மனிதரெல்லாம் நம் சொந்தமேனு அன்ளை, தொண்டை இந்த உலகுக்கு சொன்ன அன்னை தெசாவின் வாழ்வு பெருவாழ்வு. எளியவர்களுக்கு செய்யும் அரும்பணி இறைவனைத் தொழுவதைவிட மேலானது என்பர். தேவாலயங்களில், கோயில்களில், மசூதிகளில் என எந்த இறைவனை வேணட்டி பிரார்த்தித்தாலும் அந்த மனிதருக்கு தன் நேசக்கரம் நீட்டிய பண்பாளர் அன்னை தெரசா.

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். அன்னை தெரசாவுடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தன்னோட இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களுடைய சேவைகளால பெரிதும் ஈர்க்கப்பட்டாங்க. 12 வயசுல சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல், மருத்து வைத்து விடுதல் பல பணிகளைச் செஞ்சாங்க. இதையெல்லாம் செய்யத் தொடங்கினப்போ அவங்க வயசு 12.

எல்லோருடைய வாழ்க்கலையும் அவங்க வாழ்க்கையை மாத்தின ஒரு நிகழ்வு இருக்கும். அன்னை தெரசா இந்தியா வந்தது. தன்னுடைய 18 வயசுல வீட்டிலிருந்து விடுபட்டு 'Sodality of children of Mary' என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை இணைச்சுக்கிட்டாங்க.

அன்னை தெரசா
அன்னை தெரசா

அச்சகோதரிகள் இந்திய பயணம் முடிச்சிட்டு வந்த ஒருநாள் இந்தியாவில் அவர்கள் கண்ட காட்சிகளை அன்னை தெரசாவுக்கு சொன்னாங்க. இந்தியாவில் நிலவக்கூடிய ஏழ்மை, எளிய மக்களின் பாடுகள் பத்தித் தெரிஞ்சுகிட்டாங்க. அந்த மக்களுக்குத்தான் நான் இனிமேல் உதவிகளைச் செய்யப் போறேன்னு முடிவெடுத்து துறவறம் பூண்டாங்க.

அதன்படி 1928-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி ராத் ஃபர்ன்ஹாம் (Rathfarnham) எனப்படும் அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். சேவைதான் இனியலெ்லாம் என்கிற முடிவெடுக்குறாங்க. குழந்தைகள், பெரியவர்கள், ஏழைகள், நோயாளிகள் என பாரபட்சம் இன்றி சேவை செய்யவேண்டும் கிளம்புறாங்க.

கொண்ட காரிருன் மண்ணில் நீங்கிட வந்த பேரொளியாக இந்தியாவுக்கு முதல் முறையாக 1929 -ம் ஆண்டு வந்தாங்க. மேற்கு வங்கத்துல இருக்கக்கூடிய கதி்தோலிக்கத் திருச்சபைக்கு வந்தாங்க. இந்தியா வந்ததும் பிரான்ஸ் நாட்டின் சகோதரி ‘தெரசா மார்டின்' தனது பெயரை ‘தெரசா' என மாற்றிக் கொண்டார்.

'இந்தியாதான் இனி என் தாய்நாடு' என முடிவெடுத்தார். டார்ஜிலிங்கில் பணி செய்தவர் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார். ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார். 17 ஆண்டுகள் ஆசிரியப்ப பணி செய்தார். 1942-43 உலக வரலாற்றில் குண்டு சத்தங்களும், அழுகுரல்களும் ஓயாமல் கேட்ட நேரம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா

இரண்டாம் உலகப்போரும், விடுதலைப் போராட்டங்களும் உச்சத்தில் இருந்தன. பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பஞ்சத்தில் உழல்வதைக் கண்டு உதவி செய்ய நினைத்தார் தெரசா. ஆனால் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், கல்வி பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். அன்றுமுதல் முழு நேரமாக தன் சேவை பணியைத் தொடங்கினார்.

அன்றைய தினத்தில் ஐந்து ரூபாய் பணம், மூன்று நீல நிற சேலைகள்தான் அவரது சொத்தாக இருந்தது. பாட்னாவில் சென்று தன் செவிலியர் பணிக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். பல விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்தார். 1949-ல் கொல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை 'பள்ளிக்கூடம்' என்பதைத் தெரிந்துகொண்டார். சில காலங்களிலேயே ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார்.

ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்து அவர்களின் துயர் கேட்டு, கண்ணீர் துடைத்து, பிணி தீர்த்து மருத்திட்டு அன்னையாக மாறினார் தெரசா. "இந்தத் தொண்டை வாழ்நாள் முழுக்க செய்யவே விரும்புகிறேன்" என்றார். சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

அன்னை தெரசா
அன்னை தெரசா

தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று உபரி மருத்துவ பொருட்களைத் தாருங்கள். பல ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டார். பல தரப்பிலும் இருந்து உதவிகள் கிடைத்தன. வரலாற்றின் கண்கள் கண்டிறாத எளிய மனிதர்களுக்காக ஒரு Missionaries of Charity என்ற தொண்டு அமைப்பைத் தொடங்கினார். வயிராற உணவு என்பதே கண்டிராதவர்கள், மாற்றுடையற்றவர்களை அரவணைத்தார். அவர்களுக்காக பல செல்வந்தர்களிடம் நிதி கேட்டார், கேலி செய்தனர், தேவையில்லாத வேலையென்றனர், காரி உமிழ்ந்தனர். இந்த அவமானங்களை நான் வைத்துக்கொள்கிறேன். ஒன்றுமற்று கலங்கி நிற்கும் எம் சொந்தங்களுக்கு உதவி செய்ய ஏதாவது கொடுங்கள் என இறைஞ்சினார் தெரசா.

சேவை என்பது மேல்நின்று கீழ்நோக்கி மக்களைக் காண்பதல்ல. உடன்நின்று முகம் காண்பது என்பதை உணர்த்தினார். சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி, ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார். ‘காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.

காந்தி பிரேம் நிவாஸ்
காந்தி பிரேம் நிவாஸ்

பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எஸ்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். சிறை கைதிகளுக்கும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளுடன், ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்து வந்தார்.

யாரையெல்லாம் இந்த சமூகம் புறக்கணித்ததோ, மனி்தர்களாகக் கூட பார்க்க மறுத்ததோ அவர்களையெல்லாம் தன் பிள்ளைகளாக்கி, அவர்களின் அன்னையானார். அன்னை தெரசாவின் புகழ் உலகமெங்கும் பரவியது. ஒரு துளி மழைதான் அனைத்துக்கும் முதன்மை, ஒரு சிறு பொறிதான் பேரொளிக்கு ஆதி, சிறு நகர்வு தான் பெரும்பயணத்தின் முதல் அடி. ஒற்றை மனுஷி தன் நேசத்தால், தொண்டால் பல லட்ச மக்களுக்கு உதவி செய்ததோடு உலகெங்கும் சேவை என்கிற சொல்லை அர்த்தப்படுத்தினார். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து அரசு அதை உறுதிப்படுத்தியது

அன்னை தெரசா
அன்னை தெரசா

1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி நம் தேசத்தின் நிலமெங்கும் கண்ணீரால் நிறைந்த தினம். இல்லாதோரின் அன்னை, தாய்மையால் ஏழ்மை எனும் வரலாற்றுப் பிணியை அறுத்தெறிந்த சேவைக்காரி அன்னை தெரசா இவ்வுலகிலிருந்து மரணித்தார். சக மனிதர் துயர் கொள்கையில் துடித்திடும் நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism