Published:Updated:

The Legend: தமிழ்நாடு பெயர்மாற்றத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனார்!

"என்ன அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமா தமிழ்நாடுன்னு பெயர் சூட்டினாங்க? தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடுன்னு பேர் வைக்கிறதெல்லாம் ஒரு சாதனையா?" என்று எள்ளி நகையாடியிருந்தார் சீமான்.

இந்தியாவிலேயே பெயரிலேயே தனிச்சிறப்புள்ள மாநிலம் 'தமிழ்நாடு'. சமீபத்தில் 'நாம் தமிழர்கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளி ஒன்று வைரல் ஆனது. "என்ன அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமா தமிழ்நாடுன்னு பெயர் சூட்டினாங்க? தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடுன்னு பேர் வைக்கிறதெல்லாம் ஒரு சாதனையா?" என்று எள்ளி நகையாடியிருந்தார் சீமான். உண்மையிலேயே அது ஒரு சாதனைதான். இந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தது ஒரு உயிர்த்தியாகம். தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றத்துக்காகத் தன் உயிரையே துறந்த தியாகி சங்கரலிங்கனார்.

காமராஜரும் சங்கரலிங்கனாரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். வ.உ.சியும் பெரியாரும் காந்தியும் சங்கரலிங்கனார் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள், மொழிவாரி மாநிலங்கள், எல்லைப்போராட்டங்கள், பொட்டி ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரத உயிர்த்தியாகம் ஆகிய சூழலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம், அதை அலட்சியப்படுத்திய மத்திய, தமிழக காங்கிரஸ் அரசுகள், 'தமிழ்நாடு பெயர் மாற்றத்தை'த் தாண்டி சங்கரலிங்கனார் முன்வைத்த மற்ற கோரிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு