Published:Updated:

நீ என்னவா ஆகப்போற? - இந்தக் கேள்விக்கு இனி இப்படி பதில் சொல்லுங்க! #MyVikatan

ஒன்னாம் வகுப்புல, முதல் பீரியட்ல காதுல விழுந்த கேள்வி, காலேஜ்’ல கடைசி வருஷம் வரைக்கும் விரட்டும்! உங்களுக்கு ‘நேரம் நல்லாருந்தா‘ அதுக்கு அப்புறமும் விரட்டும்!

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நீ என்னவா ஆகப்போற?

இந்தக் கேள்வியைக் கடந்து வராத காதுகளே இங்க இல்லன்னு சொல்லலாம்.

ஒன்னாம் வகுப்புல, முதல் பீரியட்ல காதுல விழுந்த கேள்வி, காலேஜ்’ல கடைசி வருஷம் வரைக்கும் விரட்டும்! உங்களுக்கு ‘நேரம் நல்லாருந்தா‘ அதுக்கு அப்புறமும் விரட்டும்!

“ஆ..ஊ..னா அட்வைஸ், அறிவுரைனு எழுதித்தள்ளி, பட்ட இடத்துலயே நல்லா பஞ்ச் பண்றீங்களே...” னு உங்க mind voice என்கிட்ட சத்தமா கேக்கலாம்!

Representational Image
Representational Image

உண்மைய ஒத்துக்கணும்னா, ‘அந்தக் கேள்வி‘க்கு இதுவரை நான் சொன்ன பதில்களுக்கும், நான் இப்போ பண்றதுக்கும்கூட எந்த சம்பந்தமுமில்லை.

சமூகத்தால சரமாரியா குழப்பப்பட்ட சராசரி இளைஞன்தான் நானும். குழம்புன குட்டைய குழப்புறதுக்கு, என்னைச் சுத்தியும் நிறைய பேரு இருந்தாங்க.

நீங்கள் புரிந்துகொள்வதற்காக, நான் இதுவரைக்கும் ‘அந்தக் கேள்விக்கு‘ சொன்ன பதில்கள் என்னென்னனு சொல்றேன்.

மூணாப்புல... மன்னிக்கவும். சுத்தமா ஞாபகம் இல்லை!*

அஞ்சாப்புல... “நான் விஞ்ஞானி ஆகப் போறேன், சார்!”

பத்தாப்புல... “நான் IAS OFFICER ஆகப் போறேன், டீச்சர்!”

பன்னண்டாப்புல... “கண்டிப்பா டாக்டர் ஆகிருவேன், சார்!”

முதல் பதில் தவிர மிச்ச மூணு பதிலுமே வெவ்வேறு காரணங்களுக்காக நான் முடிவுபண்ணி சொன்னவை.

விஞ்ஞானி... காரணம் “Dexter ‘ என்கிற கார்ட்டூன் (அப்போ கார்ட்டூன் சேனலின் பொற்காலம்’ல! )

IAS officer... காரணம், விஜய் நடித்த ‘மதுர’ மற்றும் அர்ஜுன் நடித்த ‘வானவில்’.

( IAS கலெக்டர் அப்பிடிதான் அதிரடியா இருப்பாங்க. வில்லன்கள போட்டு வெளுப்பாங்க’ன்னு நினைச்சேன்... நான் நினைச்சதுல தப்பு எதுவுமில்லையே! )

Representational Image
Representational Image

டாக்டர்... காரணம், “தமிழ்நாட்டுல இருக்குறதுல சாலச் சிறந்த படிப்பு, ரெண்டு. ஒண்ணு, M.B.B.S. இன்னொண்ணு, இன்ஜினியரிங். இதுல எது படிக்கப் போறீங்க” னு எங்க கணக்கு வாத்தியார் கேட்டப்போ, எனக்கு டாக்டர் வேலை மேல இருந்த மரியாதை மற்றும் கணக்கு மேல இருந்த பயம் காரணமா, அந்தப் பதிலை சொன்னேன்.

இதுல 10th STD பதில் கொஞ்சம் விரிவா கவனிக்கப் படவேண்டியது. என் வகுப்பாசிரியர் Time pass பண்ணறதுக்கு ‘அந்தக் கேள்வி‘ய கேட்டாங்க.

வானவில் நிறம் மாதிரி, வகுப்பு முழுக்க வகை வகையான பதில்கள்.

“நான் SUPER HERO ஆகப் போறேன்“னு சொன்ன என் கடைசி பெஞ்சு நண்பன் உள்பட, பல போலீஸுகள், டாக்டர்கள், ஆசிரியர்கள் , IAS officers எல்லாரும் +2 முடிச்சு என்ஜினீயரிங் தான் சேர்ந்தோம்.

எங்கள சொல்லி குத்தமில்லை. அப்போ வேறெதுவும் தெரியல.

அதுக்கு அப்புறம்தான் மனசுல வந்துச்சு ஒரு சின்ன உறுத்தல். ஏதோ ஒண்ணு சரியா படல.

எனக்கென்னமோ, ‘அந்தக் கேள்விய‘ நாம தப்பாவே பாக்குறோமோ’னு தோணுச்சு.

‘அந்தக் கேள்வி‘ல அப்படி என்னதான் இருக்கு?'

‘அதுக்கு என்னதான் பதில் சொல்லணும்?'

‘ஒரு அசாதாரண லட்சியம்‘ (ஒரு புரட்சிகர தமிழ்ப் பட ஹீரோ மாதிரி ), ‘எல்லாருகிட்டயும் சொல்லி பெருமைப் படுற மாதிரி ஒரு வேலை‘, ‘6 இலக்க சம்பளம்’, ‘நமக்குக் கீழ 40 பேர் அல்லது 400 பேர் வேலைபார்க்கும்படியான ஒரு உயர் பதவி’etc...

Representational Image
Representational Image

இப்படி இதெல்லாம்தான் பொதுவா அந்தக் கேள்விக்கு பதிலா சொல்லணும்...சொல்லியாகணும்!

அத செய்யப் போறோமோ இல்லையோ...பதில் இப்படிதான் சொல்லுறோம். ஏன்னா, அது மானப் பிரச்னை. யாரும் நம்மல பாத்து சிரிச்சுற கூடாதுல்ல.

அந்தக் கேள்விக்கு பதிலா, “நான் சராசரியா...சாதாரணமா... சந்தோஷமா வாழப்போறேன்”னு ஒருத்தன் பதில் சொன்னாதான் என்னவாம்.

சிரிப்பாங்களோ... கேலி பண்ணுவாங்களோ!

பண்ணிக்கட்டும். அதுவும் ஒரு ஆசைதானே!

-ரா.அருண் கிருஷ்ணா

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/