Published:Updated:

"காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விடறாங்க!" - `கடலோடி' பாளையம்

பாளையம்

“இன்னிக்குப் பாருங்க... காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விட ஆரம்பிச்சாங்க, எல்லா மீனையும் அழிய வெச்சாங்க. அடையாறு இன்னிக்கு ஆறாவா இருக்குது?"

"காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விடறாங்க!" - `கடலோடி' பாளையம்

“இன்னிக்குப் பாருங்க... காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விட ஆரம்பிச்சாங்க, எல்லா மீனையும் அழிய வெச்சாங்க. அடையாறு இன்னிக்கு ஆறாவா இருக்குது?"

Published:Updated:
பாளையம்

58 வயதாகும் பாளையம், சென்னையின் பூர்வகுடிகளில் ஒன்றான மீனவர்களின் பாரம்பரிய அறிவை இன்னும் சுமந்துகொண்டு அலையும் வெகு சிலரில் ஒருவர்; சிறுவனாக இருந்த காலகட்டத்திலேயே கடலுக்குள் சென்றுவிட்ட பாளையம், அனுபவங்களால் கடலைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார். தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கடலில் கழித்துவிட்ட பாளையத்தின் உடலும் நினைவும் கடலாகவே மாறிப்போயிருக்கிறது. பாளையத்தின் கடல் பற்றிய அறிவு, நவீன தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் மீறி நிற்கிறது!

பாளையம்
பாளையம்

“இன்னிக்கு தொட்டா தெரியிற ஜிபிஎஸ் பாயின்ட் மாதிரி எந்த வசதியும் அன்னிக்குக் கெடையாது சார்... நான் கடல்ல எறங்குன காலத்துல பரங்கிமலையும் எல்.ஐ.சியும் தான் எனக்கு ஜிபிஎஸ் பாயின்ட்டு. கரைல இருந்து கடல் மேலா போற நேர்விலங்குக்குப் பரங்கிமலைதான் புள்ளி... கடல்ல இருந்து கரைக்கு வர்ற வடாவிலங்குக்கு எல்.ஐ.சி கட்டடம்தான் புள்ளி,” என்கிறார் பாளையம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அம்பது, அறுவது வருஷத்துக்கு முன்னாடி, அடையாறு ஆறும் முகத்துவாரமும் ரொம்ப அகலமா இருக்கும்... தண்ணி எல்லாம் ரொம்ப ஃபோர்ஸா போகும். கடல் தண்ணி உள்ள கோட்டூர்புரம், சைதாப்பேட்ட லெவலுக்குப் போவும். இந்த நீலத்தண்ணி உள்ள போனா சுறா, ஓலா, மாவலாசி, கிளிஞ்சான், காலா, வஞ்சிரம்னு எல்லா மீனும் இங்க கரைல நீந்தும்; அடையாறு ரிவர்ல, கரைல இருந்தே புடிப்போம். மீனுங்க மட்டும் இல்லாம, நிறைய பறவைகளும் வரும். நீ எதுக்கு வேடந்தாங்கலுன்ற, பல ஆயிரம் வெளிநாட்டுப் பறவைங்க வாழ்ந்த எடம் நம்ம அடையாறு... பழைய நினைவுகள் வந்தாலே கண்ல தண்ணி கட்டிருது சார்” காலை வெயிலில் பளபளக்கின்றன பாளையத்தின் கண்கள்.

பாளையம்
பாளையம்

“இன்னிக்குப் பாருங்க... காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விட ஆரம்பிச்சாங்க, எல்லா மீனையும் அழிய வெச்சாங்க. அடையாறு இன்னிக்கு ஆறாவா இருக்குது? இந்த நெலமையப் பாக்க வயிறு எரியிது சார் எனக்கு... இன்னிக்கு மீன்கள் இல்ல; கஷ்டப்பட்டு வல வாங்கிப் போட்டாலும் தொழில் இல்ல. அரசாங்கம் தர்ற நிவாரணமும் பத்தல... டீசல் விலையும் ஏறிட்டே போகுது... பொழைக்க வழிதெரியாம நிக்கிறோம்!” ஆமோதிப்பதைப் போல் பொங்கியது ஓர் அலை.

அடையாற்றின் கதையை, பாளையத்தின் நினைவில் இருக்கும் கடலை அறிய...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism