Published:Updated:

யாசகம் பெறுவதில் தினமும் ஒரு ரூபாய் நன்கொடை: மும்பையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் திருநங்கைகள்!

திருநங்கைகள் வழங்கும் மலிவு விலை சாப்பாடு

``மும்பையில் 5 ஆயிரம் திருநங்கைகள் இணைந்து தினமும் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்து வருகிறோம். காலையில் ஒரு ரூபாய்க்கு அவல் உப்புமா, ரவா உப்புமா, கேசரி கொடுக்கிறோம். மதியம் ரூ.10க்கு இரண்டு சப்பாத்தி, ஒரு கூட்டு, பருப்பு குழம்பு கொடுக்கிறோம்.’’

யாசகம் பெறுவதில் தினமும் ஒரு ரூபாய் நன்கொடை: மும்பையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் திருநங்கைகள்!

``மும்பையில் 5 ஆயிரம் திருநங்கைகள் இணைந்து தினமும் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்து வருகிறோம். காலையில் ஒரு ரூபாய்க்கு அவல் உப்புமா, ரவா உப்புமா, கேசரி கொடுக்கிறோம். மதியம் ரூ.10க்கு இரண்டு சப்பாத்தி, ஒரு கூட்டு, பருப்பு குழம்பு கொடுக்கிறோம்.’’

Published:Updated:
திருநங்கைகள் வழங்கும் மலிவு விலை சாப்பாடு

மும்பையில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காத நிலையில், பெரும்பாலும் புறநகர் ரயில்களில் யாசகம் பெற்றுத்தான் அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள், தாங்கள் பெறும் யாசகத்தில் சிறிய தொகையை பொதுமக்களின் பசியை போக்க நன்கொடையாக கொடுக்கின்றனர்.

இந்நிலையில், மும்பையில் திருநங்கைகள் 5 ஆயிரம் பேர் இணைந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த உணவகத்தை திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதில் காலை உணவு வெறும் ஒரு ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உணவகம் மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்திற்கு வெளியில் செயல்படுகிறது.

சாப்பாட்டிற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
சாப்பாட்டிற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

அதன் அருகில் ருக்மினி என்ற மருத்துவமனையும் இருப்பதால் நோயாளிகளை காணவரும் பொதுமக்கள், அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நபர்கள் என தினமும் 500க்கும் அதிகமானோருக்கு இந்த உணவகம் பசியாற்றி வருகிறது. இந்த உணவகத்திற்கு அரசியல்வாதிகளோ, வேறு யாருமோ உதவி செய்வதில்லை.

மாறாக இந்த உணவகத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் திருநங்கைகள் மட்டுமே, தாங்கள் யாசகம் பெறும் பணத்தில் தினமும் ஒரு ரூபாயை இத்திட்டத்திற்காக வழங்குகின்றனர். மேலும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலேயை சந்தித்து உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த உணவகத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்தின் தலைவி பூனம் சிங் இது குறித்து கூறுகையில், ``உணவகத்தை ஆரம்பித்த அன்று 270 சாப்பிட்டனர். ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்திற்காக எங்களது சமுதாய உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேர் தினமும் தலா ஒரு ரூபாய் தானமாக வழங்கின்றனர். சில அமைப்புகள் உணவு தானியத்தை தானமாக வழங்குகின்றன. கொரோனா காலத்தில் எங்கள் சமுதாய மக்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். அதையெல்லாம் பார்த்துத்தான் இந்த உணவகத்தை தொடங்கி இருக்கிறேன். கல்யாண் ரயில் நிலையத்தில், சமீர் ஷேக் என்பவர் உணவகம் நடத்தி வந்தார். அவர் சில பிரச்னைகளால் உணவகத்தை மூட நினைத்த போது அதனை நாங்கள் நடத்த முன் வந்தோம். உடனே அவர் எங்களிடம் கொடுத்துவிட்டார்.

சாப்பாடு வழங்கும் திருநங்கைகள்
சாப்பாடு வழங்கும் திருநங்கைகள்

காலையில் ஒரு ரூபாய்க்கு அவல் உப்புமா, ரவா உப்புமா, கேசரி கொடுக்கிறோம். மதியம் ரூ.10க்கு இரண்டு சப்பாத்தி, ஒரு கூட்டு, பருப்பு குழம்பு கொடுக்கிறோம். உணவகத்தை எங்களிடம் கொடுத்த ஷேக் எங்களது சமையல் அறையை கவனித்துக் கொள்கிறார். சமையலில் எங்களது சமுதாயத்தை சேர்ந்த 7 பேரும் கலந்து கொள்கின்றனர். முடியாதவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ் நார்வேகர் தொடங்கி வைத்து திருநங்கைகளின் சேவையை பாராட்டிவிட்டு சென்றுள்ளார். மேலும், திருநங்கைகளுக்கு மேம்பாட்டு பயிற்சி கொடுப்பதற்காக திருநங்கைகள் இணைந்து தொழிற்பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.