Published:Updated:

``தெம்பிருக்கிற வரை இந்த வேலையைச் செய்வேன்!’’ - நரம்பு நாற்காலி பின்னும் பார்வையற்ற கண்ணன்

கண்ணன்
News
கண்ணன் ( வி.சதீஷ்குமார் )

`மூணு வயசுல அம்மை போட்டதுல பார்வை போயிடுச்சு. நினைவு தெரியாத காலம்கிறதால, பார்வை இல்லாதது எனக்கு குறையாத் தெரியல’.

``தெம்பிருக்கிற வரை இந்த வேலையைச் செய்வேன்!’’ - நரம்பு நாற்காலி பின்னும் பார்வையற்ற கண்ணன்

`மூணு வயசுல அம்மை போட்டதுல பார்வை போயிடுச்சு. நினைவு தெரியாத காலம்கிறதால, பார்வை இல்லாதது எனக்கு குறையாத் தெரியல’.

Published:Updated:
கண்ணன்
News
கண்ணன் ( வி.சதீஷ்குமார் )

"உடம்புல தெம்பிருக்கிற வரை இந்த வேலையைச் செய்து சம்பாதிப்பேன், உடம்பு ஒத்துழைக்காத காலத்துல வாழ்றதுக்கு பணம் தேவைப்படும். அதுக்கு ஏதாவது சேர்த்துவைக்கணும். பிள்ளைங்க, அவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டா போதும்." - நாற்காலியில் நரம்புகளை வேகவேகமாகக் கோத்துக்கொண்டே பேசுகிறார் கண்ணன்.

பார்வைக்குறைபாட்டை ஒரு குறையாகவே பார்க்காமல், நிறை வாழ்க்கை வாழ காலத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார் கண்ணன். மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், நிழல் இருக்கும் இடத்தில் அமர்ந்து, நரம்பு அறுந்துபோன அலுவலக நாற்காலிகளுக்கு, புதிய நரம்புகளைக் கோத்துக் கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

கண்ணன்
கண்ணன்
வி.சதீஷ்குமார்

"பரமக்குடி பக்கம் காடறுந்தகுடி என் சொந்த ஊரு. விவசாயக் குடும்பம். நான் ஏழாவது பிள்ளை. மூணு வயசுல அம்மை போட்டதுல பார்வை போயிடுச்சு. நினைவுதெரியாத காலம்கிறதால, பார்வை இல்லாதது எனக்குக் குறையா தெரியல.

இதுதான் இயல்புனு நினைச்சே வளர்ந்தேன். இப்ப வரைக்கும் அப்படித்தான். சிவகங்கை சிறப்பு பள்ளியில படிச்சேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மதுரை யூஜி ப்ளைண்டு ஸ்கூல்ல படிச்சேன். காலேஜ்ல படிக்க ஆசை. அதற்கு வாய்ப்பு அமையல. அதுக்காக சும்மா இருக்கக்கூடாதுன்னு வேலை தேடினேன்.

கண்ணன்
கண்ணன்
வி.சதீஷ்குமார்

அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். 1991–ல டெலிபோன் பூத் வைக்க அனுமதி கிடைச்சது'' என்று பேச்சை நிறுத்தி, பின்னிய நரம்புகள் சரியான தடத்தில் அமைந்திருக்கிறதா என்பதை விரல்களால் தடவிப் பார்த்தபடி, நம் குரல் வந்த திசை நோக்கி திரும்பினார்.

''டெலிபோன் பூத்தைத் தொடர்ந்து நடத்தியிருக்கலாமே?"

கண்ணன்
கண்ணன்
வி.சதீஷ்குமார்

2005 வரைக்கும் டெலிபோன் பூத் நல்லா போயிட்டிருந்துச்சு. அதுக்கப்புறம் எல்லோர்கிட்டயும் மொபைல்போன் வந்திருச்சு. பூத்துக்கு வர்ற கூட்டம் குறைஞ்சிடுச்சு. பூத்தை மூட வேண்டியதாப் போச்சு. அதுக்குப் பின்னால பொருளாதாரப் பிரச்னை வந்திருச்சு. ஏற்கெனவே, சுந்தரராஜன்பட்டியிலுள்ள பார்வை இழந்தோர் சங்கத்தில், சில தொழிற்பயிற்சிகளைக் கத்துக்கொடுக்கிறாங்க.

அங்க, சேருக்கு வயர் பின்ன கத்துக்கிட்டேன். அதுதான் இப்போ சாப்பாடு போடுது. நம்ம தொழில் சுத்துமா இருக்கும். அதனால, கவர்ன்மென்ட் ஆபீஸ், தனியார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க. நாள் முழுக்க வேலை செஞ்சா, எல்லா செலவும் போக 200 ரூபா கிடைக்கும். சிலநேரம் வேலை இல்லாமலும் இருக்கும்.

எங்களுக்கு அரசு பஸ்ல இலவச பாஸ் கொடுத்திருக்காங்க. ஆனா, நான் குடியிருக்கும் ஆனையூரிலிருந்து மதுரைக்கு வர பஸ்கள் குறைவு. அதனால ஷேர் ஆட்டோ, மினி பஸ்ஸை பிடிச்சு வர வேண்டியிருக்கு. வருமானத்துல கணிசமான தொகை போக்குவரத்துக்கே சரியா போய்டுது."

குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க?

கண்ணன்
கண்ணன்
வி.சதீஷ்குமார்

என் மனைவிக்கும் பார்வைக்குறைபாடு இருக்கு. அவங்க தற்காலிக இசை ஆசிரியரா பள்ளியில் வேலைபார்க்கிறாங்க. ரெண்டு பிள்ளைங்க, பையன் பி.ஈ. முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்காப்ல. பொண்ணு டிகிரி பண்ணிட்டிருக்காங்க.

பிள்ளைங்க ஒரு நிலைக்கு வந்துவிட்டால், நீங்க ஓய்வெடுக்கலாம்தானே?

''அப்படியெல்லாம் இல்லை. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துகிட்டாலே போதும். நானும் என் மனைவியும் உடம்புல தெம்பு இருக்கிறவரை உழைச்சுட்டு இருப்போம். கடைசி காலத்துக்கு மட்டும் கொஞ்சம் காசு சேத்து வச்சிக்கணும். இனிமேதான் ஏதாவது சேர்க்கணும். ''

நரம்பு பின்னுற வேலையை சிறப்பா செய்றீங்க. இதையே இன்னும் பெருசா செய்ய திட்டம் இருக்கா? அதுக்கு அரசு அல்லது தனியார் அமைப்புகள் உதவி செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்களா?

கண்ணன்
கண்ணன்
வி.சதீஷ்குமார்

''நான் எதையும் பெருசா எதிர்பார்க்கலை. நகரத்துக்குள்ளே வந்து வேலைபார்க்கிறதுக்கு வெயில், மழை படாத சின்ன இடம் ஒதுக்கிக்கொடுத்தா போதும். ஒரு டீ சாப்பிடப் போறதுக்கும் பாத்ரூம் போறதுக்கும் வாய்ப்புள்ள இடமா இருந்தா நல்லா இருக்கும். அரசாங்கம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருது.

யார்ட்டயும் வேறு எந்த உதவியும் எதிர்பார்க்கலை. இன்னும் கொஞ்சம் வருமானம் வந்தா, என்னைவிட கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்யணும்கிறதுதான் என் ஆசை. அப்படி ஒரு நிலை வரணும்னு நினைச்சுத்தான் காலத்தைக் கடத்திட்டு இருக்கேன்.''

கண் நரம்பின் கோளாறால் கண்ணனின் பார்வை பறி போனாலும், அவர் கையில் பட்டுச்செல்லும் பிளாஸ்டிக் நரம்புகளோ... நாற்காலிகளை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது.