Published:Updated:

``உங்களை நேசித்துக்கொண்டே இருப்பேன் அப்பா'' - மறைந்த பாடகர் கே.கே மகள் உருக்கம்

கே.கே. மகள் தாமரா ( www.instagram.com/jyothykrishna )

கே.கே-வின் மனைவி ஜோதி, இரண்டு வருடங்களுக்கு முன்னால் தன் கணவரை ஓவியமாக வரைந்து தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்...

பாடகர் கே.கே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் எதிர்பாராத மரணம் அனைவரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியின் விழாவொன்றில் இசைக் கச்சேரியை நிகழ்த்தச் சென்றவர், உடல்நலம் சரியில்லாமல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கே.கே-யின் தலையிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுவதால், கே.கே-யின் மரணத்தை `இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாடகர் கே.கே ஓவியம்
பாடகர் கே.கே ஓவியம்

அவரின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். கே.கே-வின் மனைவி ஜோதி, தன் கணவரை ஓவியமாக வரைந்து தன் இன்ஸ்டாகிராமில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கே.கே-வின் மகள் தாமரா தன்னுடைய இன்ஸ்டாவில் தன் அப்பாவின் இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்திருப்பதோடு, கூடவே `நான் உங்களை எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்பேன் அப்பா' என்று நெகிழ்ந்திருக்கிறார். தாமராவும் பாடகி என்பதால், அப்பாவின் இசைப்பயணம் மகள் வழியாகத் தொடரும் என்று ரசிகர்கள் தாமராவை தேற்றி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism