Published:Updated:

``ரெண்டு நோக்கம்தான் எங்களுக்கு!'' - ஆறு நண்பர்களால் வட சென்னையில் ஒலிக்கும் கர்னாடக இசை

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி

"நாங்க வெவ்வேறு நிறுவன வேலைகள்ல இருக்கிறோம். ஒரு ரூபாய்கூட லாப நோக்கம் இல்லாமல்தான் சபாவை நடத்திட்டிருக்கிறோம். எங்களுடைய சொந்தப் பணத்தையும் அதிகளவில் செலவழிக்கிறோம்."

மார்கழி மாதம் என்றாலே கர்னாடக இசைக் கச்சேரிகள்தாம் நம்மிள் பலருக்கும் நினைவுக்கு வரும். கர்னாடக இசைக் கச்சேரிகள் என்றாலே, சென்னை தி.நகர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளிலுள்ள சபாக்கள்தாம் வெகு பிரபலம். இந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக வட சென்னையிலும் கர்னாடக இசை ஒலிக்கக் காரணமாக இருக்கிறார்கள், 6 நண்பர்கள் குழுவினர். 

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி

வட சென்னையின் கொரட்டூர் பகுதியில் `கொரட்டூர் கல்சுரல் அகாடமி' என்ற பெயரில் சபா நடத்திவரும் இந்த நண்பர்கள், ஒன்பது ஆண்டுகளாக மார்கழி இசைத் திருவிழாவை நடத்திவருகின்றனர். தாங்கள் வாழும் கொரட்டூர் பகுதி மக்களுக்கு கர்னாடக இசையை எளிதாகவும் எளிமையாகவும் வழங்க, லாப நோக்கமின்றி சபாவை நடத்திவருகிறார்கள். இதற்காக தங்களின் பணிச்சுமைகளுக்கு இடையே, பெரும் சிரத்தையுடன் சபாவை நடத்திவருகின்றனர். சபாவின் தலைவர் ராமனிடம் பேசினோம்.

"நீண்டகாலமாக இயங்கிவரும் `பெரம்பூர் சங்கீத சபா'வைத் தவிர, வட சென்னையில் வேறு சபாக்கள் ஏதுவுமில்லாமல் இருந்தது. எனவே, கொரட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்கள் தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் நடைபெறும் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்குச் செல்ல நிறைய மெனக்கெட வேண்டியிருக்கு.

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி

நல்ல கர்னாடக இசையை எங்க பகுதி மக்களுக்கும் சிரமமின்றி கேட்டு ரசிக்கணும்; கர்னாடக சங்கீதத்தில் புலமை பெற்ற கலைஞர்கள் எங்க பகுதிக்கும் வந்து நிகழ்ச்சி செய்யணும் என்ற நோக்கத்தில், 6 நண்பர்கள் இணைந்து, 2011-ம் ஆண்டு இந்த சபாவைத் தொடங்கினோம்.

நான் உட்பட மற்ற 5 நண்பர்களுக்கும் கர்னாடக இசைப் பயின்ற அனுபவம் ஓரளவுக்கு உண்டு. எனவே, அனுபவமுள்ள கலைஞர்களை மட்டுமே நாங்கள் வரவழைக்கிறோம். எங்க பகுதியிலுள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியிலுள்ள அரங்கத்தைத்தான் எங்களுடைய சபாவின் கலையரங்கமாகப் பயன்படுத்துகிறோம். அதற்கு அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. அதற்காக, அந்தப் பள்ளி உள்கட்டமைப்பு பணிகளுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.|

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி
சரிகமபதநி டைரி 2019

எங்க சபா நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு பகுதி மக்களும் அதிகளவில் வர்றாங்க. வருஷத்துக்கு 45 - 50 நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதில், பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து 10 நாள்கள் கச்சேரியும், ஒருநாள் தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சியையும் நடத்துவோம். இசைக் கச்சேரிகள் தவிர, நாம சங்கீர்த்தனம், உபநியாசம், மேடை நாடக நிகழ்ச்சிகளையும் எங்க சபாவில் நடத்துறோம்.

சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா, பாம்பே சகோதரிகள், மாம்பலம் சகோதரிகள் உட்பட பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் எங்க சபாவுக்கு வந்து பாடியிருக்காங்க. நிரந்தர உறுப்பினர்கள் 300 பேர் உட்பட 500 பேர் எங்க சபாவின் உறுப்பினர்களாக இருக்காங்க.

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி
``ஒரு தவற்றைக் கண்டிக்கும் துணிச்சல் இங்கே குறைந்துவிட்டது!" - தெறிக்கும் டி.எம்.கிருஷ்ணா

உறுப்பினர்கள் தவிர, சபாவில் இசை நிகழ்ச்சியைக் காண வருவோரிடம் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மேடை நாடக நிகழ்ச்சியைக் காண வருவோருக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிக்கிறோம். அதுவும் 50 ரூபாய் என்ற குறைந்த கட்டணம்தான் வசூலிப்போம்" என்கிற ராமன் உட்பட 6 நண்பர்களும் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

"சமீப காலங்களில் ஸ்பான்ஸர் பிடிப்பதும், பாமர மக்களிடம் கர்னாடக இசையைப் பிரபலப்படுத்துவதும் பெரும் சவால்களாக இருக்கு. ஆனாலும், நாங்க வளர்ந்த, வாழும் கொரட்டூர் பகுதி மக்களுக்குக்கான எங்க கலைப் பணியைச் சரியா செய்யணும்னு உறுதியா இருக்கிறோம்.

சபாவில் இசை நிகழ்ச்சியைக் காண வருவோரிடம் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மேடை நாடக நிகழ்ச்சியைக் காண வருவோருக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிக்கிறோம்.
ராமன்

அதனால, நண்பர்கள் 6 பேரும் மெனக்கெட்டு சபாவை நடத்திட்டு வர்றோம். நாங்க வெவ்வேறு நிறுவன வேலைகள்ல இருக்கிறோம். ஒரு ரூபாய்கூட லாப நோக்கம் இல்லாமல்தான் சபாவை நடத்திட்டிருக்கிறோம். எங்களுடைய சொந்தப் பணத்தையும் அதிகளவில் செலவழிக்கிறோம்.

இந்த சபாவில் கச்சேரிகள் நடத்துவதற்காக, வாரத்தில் ஒருமுறை 6 நண்பர்களும் சந்தித்துப் பேசுவோம். எல்லோரின் ஒப்புதலுடன்தான் ஒவ்வொரு கச்சேரியையும் நடத்துகிறோம்.

கொரட்டூர் கல்சுரல் அகாடமி
கொரட்டூர் கல்சுரல் அகாடமி
``அரசியல் மட்டுமல்லாம மனித உணர்வுகளையும் இசை மூலமா பதிவு செய்யணும்!" - `ஒத்த செவுரு' ஓப்பன் டாக்

இளைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் இசைத் திறனை வெளிப்படுத்த சபாக்களில் கச்சேரி செய்வதெல்லாம் சிரமமான விஷயம். அத்தகைய கலைஞர்களை எங்க சபாவில் பாட ஊக்குவிக்கிறோம்; வாய்ப்பு வழங்குகிறோம். எங்களால் இயன்றவரை கொரட்டூர் சபாவை சிறப்பாக நடத்தத் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று உற்சாகமாகக் கூறுகிறார், ராமன்.

அடுத்த கட்டுரைக்கு