Published:Updated:

``ஒரு தவற்றைக் கண்டிக்கும் துணிச்சல் இங்கே குறைந்துவிட்டது!" - தெறிக்கும் டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா

பகுத்தறிவுச் சிந்தனை வேறு; இந்தப் பண்பாடுகள் வேறு என்பது மாதிரியாகத் தனித்தனியே நாம் பிரித்து வைத்திருக்கிறோம்.

``ஒரு தவற்றைக் கண்டிக்கும் துணிச்சல் இங்கே குறைந்துவிட்டது!" - தெறிக்கும் டி.எம்.கிருஷ்ணா

பகுத்தறிவுச் சிந்தனை வேறு; இந்தப் பண்பாடுகள் வேறு என்பது மாதிரியாகத் தனித்தனியே நாம் பிரித்து வைத்திருக்கிறோம்.

Published:Updated:
டி.எம்.கிருஷ்ணா

சாதிக்கு அப்பாற்பட்டது சங்கீதம் என்று தனிமனித இயக்கமாகத் தொடர்ந்து செயல்படுபவர் டி.எம்.கிருஷ்ணா. ஆல்காட் குப்பத்தில் இசைக்கச்சேரி, கர்னாடக சங்கீத சபாக்களில் கானாப் பாடல் என்று பல மாற்றங்களை நடத்திக் காட்டியவர், சமீபத்தில் 'குடியுரிமைத் திருத்தச் சட்ட'த்துக்கு எதிரான போராட்டக்களத்துக்கும் வந்திருக்கிறார்.

''உங்களைப் போன்ற வி.ஐ.பி-கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடுகிறபோது, எதிர் வினைகளைச் சந்திக்க வேண்டியிருக்குமே...?"

''போனவருடம்கூட டெல்லியில் எனது கச்சேரி நடை பெறவிடாமல், வலதுசாரிகள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலே எதிர்ப்புகளையெல்லாம் மீறி, அரசு சார்ந்த இசை விழாவில் என்னைப் பாடச் செய்தார். எதிர்வினைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக, ஜனநாயக நாட்டில் உரிமைகளைக் காப்பாற்ற நாம் குரல் கொடுக்காவிட்டால், வேறு எதைக் காப்பாற்றிவிடப்போகிறோம்?"

''குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் கூறியிருக்கும் அறிவுரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"உறுதியாக எதிர்க்கும் சில பேரைத் தவிர்த்து, நமது நாட்டிலுள்ள கலைஞர்கள், குறிப்பாக சிந்தனையாளர்கள் எல்லோருமே சுயநலமாகத்தான் யோசிக்கிறார்கள். ராஜா, ஜமீன்தார், அரசியல்வாதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி என அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து நமக்குப் பயன் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இங்கே எல்லோருக்குமே இருக்கிறது. இந்த நிலப்பிரபுத்துவ மனநிலை இருப்பதால்தான், ஒரு தவற்றைக் கண்டித்துப் பேசுகிற துணிச்சல் என்பது இங்கே ரொம்பவும் குறைச்சலாகிவிட்டது. விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/37tE87e

பகுத்தறிவுச் சிந்தனை வேறு; இந்தப் பண்பாடுகள் வேறு என்பது மாதிரியாகத் தனித்தனியே நாம் பிரித்து வைத்திருக்கிறோம். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர், இந்த இடைவெளியில் புகுந்து கொள்கிறார்கள்.

சுய மரியாதையை இந்தத் தேசத்துக்கே கற்றுக்கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிடச் சிந்தனை, சுயமரியாதை, சமத்துவம் என்பவை வெறுமனே சித்தாந்தம் மட்டு மல்ல... அரசியல் கட்ட மைப்பிலேயே இதன்மூலம் எப்படி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், அப்படிப்பட்ட தமிழ்நாட்டில்தான் இன்றைக்குத் துணிச்சலுடன் குரல் கொடுப்பதற்கே தயங்குகிறோம் அல்லது வளவளா கொழகொழா என்று எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், நாம் எந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டோம் என்பதை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'சாதிகளற்ற சமத்துவத்தை நோக்கிய முற்போக்காளர்களின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``ஒரு தவற்றைக் கண்டிக்கும் துணிச்சல் இங்கே குறைந்துவிட்டது!" - தெறிக்கும் டி.எம்.கிருஷ்ணா

"முற்போக்காளர்கள் தாங்கள் சார்ந்த அரசியலைப் பற்றிப் பேசுகிறபோது, மக்களின் கலை, பண்பாடு, நம்பிக்கை, பக்தியைப் பற்றியும் சேர்த்துப் பேசுவதில்லை. பகுத்தறிவுச் சிந்தனை வேறு; இந்தப் பண்பாடுகள் வேறு என்பது மாதிரியாகத் தனித்தனியே நாம் பிரித்து வைத்திருக்கிறோம். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர், இந்த இடைவெளியில் புகுந்து கொள்கிறார்கள்.

உதாரணத்துக்குக் கர்னாடக சங்கீதத்தையே எடுத்துக் கொள்வோம்... 'இது பிராமின் இசை' என்பதாகத்தானே நடைமுறை இருக்கிறது. 'இது உன் இசை அல்ல; எங்கள் இசை' என்று நாம் திருப்பி வாங்கியிருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால்தானே அதிலுள்ள தவறுகளைத் திருத்தி, மக்கள் எல்லோரும் கொண்டாடுகிற மாதிரியான ஜனநாயகத் தன்மையைக் கொண்டுவந்திருக்க முடியும்!"

''உங்களது நிலைப்பாடுகளால், நீங்கள் பிறந்த சாதியில் நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்குமே...?"

"நான் 'ஆன்டி பிராமினாக' இருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்லிவருகிறார்கள். இதுதொடர்பாகக் குடும்பம், நட்பு வட்டம் என்று பல தளத்திலிருந்து அழுத்தங்களும் வருகின்றனதான். அதேசமயம் எனக்கிருக்கிற சலுகைகள் வசதிவாய்ப்புகளுக்கு மத்தியில் இதையெல்லாம் நான் பெரிய விஷயமாக எடுத்துச் சொல்வதே தவறு. எந்தவித உரிமையும் இல்லாமல் சமூகத்தின் அடித்தட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களோடு ஒப்பிட்டால், எனது இந்த நிலைப்பாடெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல."

> ''சமுதாய ரீதியிலான இந்த முற்போக்குச் சிந்தனைகள் எப்போது, எங்கே, எப்படி உங்களுக்கு அறிமுகமாயின?"

> ''டி.எம்.கிருஷ்ணா, தன் சொந்த வாழ்க்கையில், சாதி மறுப்புக் கொள்கைகளை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறார்?"

> ''பேருந்துகளில் 'கானா' பாடுகிற டி.எம்.கிருஷ்ணா, அந்த மக்களின் குடிசைகள் அகற்றப்படும்போது அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லையே?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், ஆனந்த விகடன் இதழில் முழுமையான பேட்டியை வாசிக்க > "அநீதியை எதிர்க்க தமிழகம் தயங்கலாமா?" https://cinema.vikatan.com/music/tm-krishna-shares-why-music-should-be-casteless

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism