Published:Updated:

உங்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும் 90ஸ் கிட்ஸ்! #MyVikatan

மிட்டாய்

உரல் மிட்டாய், பாக்கு மிட்டாய், பம்பரம் மிட்டாய், சிகரெட் மிட்டாய், சீரகம் மிட்டாய் என ஒவ்வொரு மிட்டாயும் என்னை பால்ய காலத்திற்கு கொண்டு போனது. தேன் மிட்டாய், இஞ்சிமிட்டாய், ஜவ்வுமிட்டாய், பேப்பர் அப்பளம் என ஒவ்வொன்றும் அல்டிமேட் ரகம்.

உங்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும் 90ஸ் கிட்ஸ்! #MyVikatan

உரல் மிட்டாய், பாக்கு மிட்டாய், பம்பரம் மிட்டாய், சிகரெட் மிட்டாய், சீரகம் மிட்டாய் என ஒவ்வொரு மிட்டாயும் என்னை பால்ய காலத்திற்கு கொண்டு போனது. தேன் மிட்டாய், இஞ்சிமிட்டாய், ஜவ்வுமிட்டாய், பேப்பர் அப்பளம் என ஒவ்வொன்றும் அல்டிமேட் ரகம்.

Published:Updated:
மிட்டாய்

80’ஸ் அல்லது 90’ஸ் கிட்ஸ் மருதமலைக்கு சென்றால், முருகனின் அருளோடு, பழங்காலத்து மிட்டாய்களையும் ஸ்னாக்ஸ்களையும் சுவைத்து மகிழலாம்.

“எந்த பாக்கெட் எடுத்தாலும் 10 ரூபாய்ங்ண்ணா.. உள்ள வாங்கன்னா, உங்களுக்கு புடுச்ச முட்டாய் எடுத்துக்கங்களாமுண்ணா…” என கொங்கு தமிழில் பேசினார் கடைக்காரர் ராஜேந்திரன்.

நான் ஆச்சரியப்பட்டு கடையை வேடிக்கை பார்க்கும்போது, என்னை விட என் மகனும், மகளும் மிகவும் ஆர்வமாக, உடனே எல்லா மிட்டாயும் வாங்கனும்னு சொன்னார்கள். மலை மேலே முருகனை பார்த்திட்டு, திரும்ப வரும்போது வாங்கிக்கலாம் என்றால், அவர்கள் கேட்கவே இல்லை.

கடைக்குள் சென்றோம் பர்ச்சேஸ் ஆரம்பமானது. உரல் மிட்டாய், பாக்கு மிட்டாய், பம்பரம் மிட்டாய், சிகரெட் மிட்டாய், சீரகம் மிட்டாய் என ஒவ்வொரு மிட்டாயும் என்னை பால்ய காலத்திற்கு கொண்டு போனது. தேன் மிட்டாய், இஞ்சிமிட்டாய், ஜவ்வுமிட்டாய், பேப்பர் அப்பளம் என ஒவ்வொன்றும் அல்டிமேட் ரகம். வாயில் போட்டால் புளிப்பும் இனிப்பும் கலந்து கட்டி அடிக்கும் இளந்தைப்பழம் மிட்டாயை பார்த்த உடனே வாயில் எச்சில் ஊறியது. மொத்தம் 320 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணினேன்.

“அண்ணா உங்களுக்கு ரூ.20 தள்ளுபடிங்ண்ணா என்ற ராஜேந்திரனிடம் பேச்சுகொடுத்தேன். எப்படிங்கே இந்த ஐடியா வந்துச்சு?” என்றேன்.

“நான் இதற்கு முன்னாடி வேற வேலை பார்த்தேன். கொரோனாவால் அந்த வேலை முடங்கி இருச்சு. அடுத்து என்ன பண்றதுண்ணு முழுச்சுகிட்டு நின்னேன். அப்போது, என் நண்பன் சென்னையில் இதுபோல் 90’ஸ் கிட்ஸ் கடையை பார்த்திருக்கான். அவன் ரொம்ப சிலாகிச்சு இத பத்தி சொன்னான். சரி நாமலும் ஆரம்பிப்போமுன்னு. மருதமலையில் ஆரம்பிச்சேன். மலை அடிவாரத்தில் முதல் கடையே நம்ம கடைதான்.

80’ஸ், 90’ஸ் கிட்ஸ் மிட்டாய்களை முதல் முதலாக இங்கே அறிமுகப்படுத்தினதும் நாம தான். இப்போ இங்கேயே 10 கடைகளுக்கு மேல் விற்க ஆரம்பிச்சிட்டார்கள். பூஜை பொருட்களோடு சேர்த்து இதையும் விற்கிறோம். உங்கள மாதிரி வெளியூர்களில் இருந்து வருகிறவங்க, இந்த மிட்டாய்களை வாங்கிட்டு போறாங்க. நான் 48 வெரைட்டி விற்கிறேன். ஒவ்வொன்னும் தரமாக இருக்கும். பொருள் தரமில்லை என்றால், நாங்க கொள்முதல் செய்யமாட்டோம்.

கோவை, திண்டுக்கல்லில் இருந்து மொத்தமாக பஸ்சில் பார்சல் சர்விஸில் அனுப்பி வச்சிடுவாங்க. நான் பாக்கெட் போட்டு விற்பனை செய்வேன். சில கடைகளில் பிளாஸ்டிக் டப்பாவில் விற்பார்கள். பிளாஸ்டிக் டப்பாவில் அடைச்சு விற்கிற மிட்டாய் எல்லாம் ரூ.20. நம்ம கடையில் எல்லா பாக்கெட்டுமே ரூ.10 தான்” என்றார்.

90’ஸ் கிட்ஸ் ராஜேந்திரன்
90’ஸ் கிட்ஸ் ராஜேந்திரன்

“உங்கள பார்த்தால் வெளிநாட்டு நபர் போல் இருக்கீங்களே, ஆனா தமிழ் நல்லா பேசுறீங்களே?”

“அய்யா தலைவா நான் திண்டுக்கல் காரன். 1992-ல் பிறந்தவன். எங்க அம்மா, அப்பா எல்லாம் இங்க உள்ளவங்கதான். எனக்கு வெயில் மட்டும் அலர்ஜி. அப்படி ஒரு பிரச்னை எனக்கு இருக்கு. அதனால், வெயில் நேரத்தில் மட்டும் வெளியே நடமாட முடியாது. அவ்வளவுதான், மத்தபடி அக்மார்க் தமிழன் நான். பழச யாரும் மறக்க கூடாது என்பதற்காக, மனசுக்கு புடுச்சு இந்த வியாபாரத்தை பார்க்கிறேன்.!”

அவர் சொன்ன வார்த்தைகள், அவரிடம் வாங்கிய மிட்டாய் போல் இனிமை.!

அ.ஹரிகரசுதன்