Published:Updated:

தெரு நாய்கள் ‘திடீர்’ பிடிப்பு! நாய் பாதுகாப்பாளர்கள் எதிர்ப்பு.!

நாய் பிடிக்கப்பட்டபோது
News
நாய் பிடிக்கப்பட்டபோது

நாய்களும் நம்மைப் போன்ற உயிரினம்தான் அவைகளுக்கும் இந்த பூமியில் வாழும் உரிமை உள்ளது. தெருவில் ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த அப்பாவி நாய்களை பிடித்து தெருவைவிட்டு அப்புறப்படுத்துவது கொடுமை. -'நன்றி மறவேல்' அமைப்பு!

Published:Updated:

தெரு நாய்கள் ‘திடீர்’ பிடிப்பு! நாய் பாதுகாப்பாளர்கள் எதிர்ப்பு.!

நாய்களும் நம்மைப் போன்ற உயிரினம்தான் அவைகளுக்கும் இந்த பூமியில் வாழும் உரிமை உள்ளது. தெருவில் ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த அப்பாவி நாய்களை பிடித்து தெருவைவிட்டு அப்புறப்படுத்துவது கொடுமை. -'நன்றி மறவேல்' அமைப்பு!

நாய் பிடிக்கப்பட்டபோது
News
நாய் பிடிக்கப்பட்டபோது

தெருவெங்கும் அதிகரித்து வரும் நாய்களால் பாதிக்கப்படுகிறோம் என்று பொதுமக்கள் ஒருபக்கமும், மனிதாபிமானமின்றி விதிகளை மீறி நாய்களை பிடிக்கிறார்கள் என்று நாய்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மறுபக்கமும் புகார் தெரிவித்து வருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாய் பிடிக்கும்போது
நாய் பிடிக்கும்போது

சமீபத்தில் மதுரை மாநகராட்சி 58-வது வார்டில் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்களை மாநாகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று ஊருக்கு வெளியே விட்டுள்ளார்கள், இதில் எந்த விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை இது தெரு நாய்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி என்று, புறக்கணிப்பட்ட நாட்டு நாய்கள், சமூக நாய்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய 'நன்றி மறவேல்' என்ற அமைப்பை சேர்ந்த மாரிக்குமார், "நாய்களும் நம்மைப் போன்ற உயிரினம்தான் அவைகளுக்கும் இந்த பூமியில் வாழும் உரிமை உள்ளது. தெருவில் ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த அப்பாவி நாய்களை பிடித்து தெருவைவிட்டு அப்புறப்படுத்துவது கொடுமை.

தெருவில் ஒரு திருடன் திருடிவிட்டான் என்பதற்காக எல்லா மனிதர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்களா? நாய்களை பிடிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரு நாய்களை பிடிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. வெறி நாயை சரியாக இனம் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுவாக தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள் மக்களை ஒன்றும் செய்யாது. அப்படியே அவைகளை பிடித்தாலும் கருத்தடை செய்து மீண்டும் அவைகள் வாழ்ந்து வரும் பகுதியிலயே விட்டு விடவேண்டும்.

'நன்றி மறவேல்' மாரிக்குமார்
'நன்றி மறவேல்' மாரிக்குமார்

புதிதாக ஒரு பகுதியில் அவைகளை விட்டு வந்தால், உணவில்லாமல் சூழல் பிடிக்காமல் பாதிக்கப்படும். நாய்களை பிடிக்கும்போது கால்நடை மருத்துவர் அருகில் இருக்க வேண்டும்.
சமீபத்தில் ஆரப்பாளையம் 58-வது வார்டில் அப்பகுதி கவுன்சிலர் ஏற்பாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் வண்டியுடன் வந்து பல  நாய்களை பிடித்துச்சென்றுள்ளார்கள்.  அதை எங்கே விட்டார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் கொடுமையானது, நாய் உள்ளிட்ட உயிரினங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மாநகராட்சி ஊழியர்களுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ யாருக்கும் தெரிவதில்லை. அவைகளுக்கான சட்டம் என்ன கூறுகிறது என்பதும் தெரியவில்லை." என்றார்.

இது குறித்து 58-வது வார்டு கவுன்சிலர் எம்.ஜெயராமனிடம் கேட்டோம், "என் வார்டில் ஏகப்பட்ட நாய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சமீபத்தில் வெறி நாய் கடித்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் பெண் பிள்ளைகள். ஏரியா மக்கள் அனைவரும் என்னிடம் வந்து முறையிட்டார்கள். என் வார்டு மக்களை காப்பதுதான் முக்கியம். மக்கள் முக்கியமா? நாய்கள் முக்கியமா என்றால் பொதுவாக எல்லோரும் என்ன முடிவு எடுப்பார்கள்.? அதைத்தான் நான் செய்தேன். நாய்களை துன்புறுத்தவில்லை. அவைகளை முறையாக பிடித்து மாநகராட்சிக்குறிய இடங்களில் விட்டு வந்தார்கள்.

எம்.ஜெயராமன்
எம்.ஜெயராமன்

நாய் உள்ளிட்ட உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், நாய் கடித்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், நாய்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்களை நாய் கடித்தாலும் இதைத்தான் சொல்வார்களா என்று தெரியவில்லை” என்றார்.

வெறி நாய்க் கடிக்கு போதிய தடுப்பு மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாத சூழலில், நாய்களை பிடிப்பதில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் அமைதியாக உள்ளது.

நாய் பிடிக்கப்பட்டபோது
நாய் பிடிக்கப்பட்டபோது

மக்களின் நெருக்கடியால் கவுன்சிலர்களே தங்கள் செலவில் மாநகராட்சி ஊழியர்களை அழைத்து வந்து நாய்களை பிடிக்கிறார்கள். அதே நேரம், அப்பாவி நாய்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்ற கோரிக்கையை கைவிடப்பட்ட நாய் பாதுகாப்பாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.