Published:Updated:

``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

Published:Updated:
``பாலியல் வன்கொடுமையும் கையால் கழிவு அள்ளுவதும்... ஒரே வகை வன்முறைதான்!"

காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்ட மேடை ஒன்றில்தான், தேசிய அளவிலான அந்த சர்வே எண்ணிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவும் மத்திய அரசின் `தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மேம்பாட்டுக் கழகம்' அதனை வெளியிட்டது. 

அந்த அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, ஒவ்வொரு மாநிலமாக எடுத்துவரும் சர்வேயின்படி, இதுவரை மொத்தம் 20,500 கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 6,000 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மண் கழிவறைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கர்நாடகாவில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 1,774 பேர் இருக்கிறார்கள். குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் `கையால் மலம் அள்ளுபவர்கள் இல்லை' என்று மறுத்தாலும் அந்த மாநிலங்களிலும் அத்தகைய தொழிலாளர்கள் இருப்பதாக சர்வே நிறுவனம் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இல்லாத தேசமாக நம்மை அறிவித்துக்கொண்ட நிலையில், `கையால் மலம் அள்ளச் செய்வது இந்தியச் சட்டப்படி மனித உரிமைக்குப் புறம்பானது' என்று பல்வேறு அம்சங்கள் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசால் முன்முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இப்படியான புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது. சர்வே பணிகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். மத்தியில் கடந்த 2014-ல் பொறுப்பேற்ற அரசு, தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த காந்தியின் பெயரால் `தூய்மை இந்தியா’ திட்டத்தைக் கொண்டுவந்தது. புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட அதே மேடையில் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், `காந்தியின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், அவரது கொள்கைகள் நிறைவேற உழைக்கும் மக்களுக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்’ என்றார். ஆனால், உண்மையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? 

மேற்கு டெல்லியில் கடந்த மாதம் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய 5 பேர், எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாத காரணத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மாதத்தில் மட்டும் இந்திய அளவில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை 11. இவர்களுக்கான இழப்பீட்டு நிவாரணம் குறித்த கேள்வி எழுந்தபோதுதான், தலா 10 லட்ச ரூபாய் இழப்பீட்டு நிதி அறிவிக்கப்பட்டது. இதில் சில கேள்விகள் பிரதானமாக எழுந்தன. 

 `கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இல்லவே இல்லை' என்று அரசே அடித்துச் சொன்ன நிலையில், தற்போது இந்தப் புள்ளிவிவர எண்ணிக்கை வெளிவந்திருக்கிறது. இந்தச் சூழலில் இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?’

`கடுமையான சட்டம் இருந்தும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் நிராதரவாக விடப்படுவது போலவே மனிதக் கழிவை அள்ளும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை அரசு உருவாக்கியுள்ளதா?’ 

 `இழப்பீடாக  10 லட்சம் ரூபாய் ரொக்கம் நிர்ணயிப்பது சரியானதா?’  

இதில் தமிழகத்தின் நிலைகுறித்து விளக்கினார் `மாற்றம் இந்தியா நிறுவன'த்தைச் சேர்ந்த நாராயணன். 

``பாலியல் வன்கொடுமையும் கையால் மலம் அள்ள நிர்ப்பந்திப்பதும் ஒரே வகையான வன்முறைதானே! தமிழகத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காகச் சட்டம் இருந்தாலும், அது செயல்படும்விதத்தில் பெரிய முரண்பாடு நிலவுகிறது. இங்கே துப்புரவுத் தொழிலாளர்கள் என்று கண்டறியப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் 10 லட்சம் ரூபாய் நிதிகூட இன்னும் சென்று சேராத நிலைதான் இருக்கிறது. அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி என்கிற கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. தமிழகத்தில்தான் தொழில்துறைக்கான இயந்திரமுறை உற்பத்திக்கான முதலீடு அதிகம். ஆனால், மற்ற எல்லாவற்றுக்கும் இயந்திரத்தை நம்பியிருக்கும் நாம் மலம் அள்ளுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் மட்டும் இன்னும் மனிதர்களைச் சார்ந்திருக்கிறோம். இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த 10 லட்சம் ரூபாய் நிதிகூட மகாராஷ்டிர மாநிலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்படுவதே. தனியார் இடங்களில் துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இழப்பீடும் கிடையாது. தூய்மை இந்தியா என்னும் பெயரால் சக மனிதர்களைக் கழிவு அள்ளச் செய்து சுரண்டுவதை ஒழித்தால்தான் உண்மையிலேயே இந்தியா தூய்மை அடையும்” என்றார்.