Published:Updated:

`ஒரே நாளில் 90,000 பேர் சிக்கினர்; தப்பியது எப்படி!'- ஊழல்குறித்து தமிழிசை #EndCorruption

எம்.திலீபன்
ஈ.ஜெ.நந்தகுமார்

``அதிக பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிற அரசியல்வாதிகள், இவ்வளவு பணத்தை நான் செலவு பண்ணினால்தான் அடுத்த தேர்தலைச் சந்திக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.''

தமிழிசை
தமிழிசை

"வெற்றி என்பது பணத்தின் அடிப்படையில் வருகிறது என்பதை நினைக்கும்போது, நல்ல வேட்பாளர்கள் ஜெயிக்க முடியவில்லையே என்கிற மனவருத்தம் ஏற்படுகிறது" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

தமிழிசை
தமிழிசை

நாட்டில் நிலவும் லஞ்சலாவண்யம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையிடம் பேசினோம். "பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் நிச்சயமாக ஒழிந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் டெல்லிக்குச் செல்லும்போது, அக்கட்சியின் அமைச்சர்கள் இருக்கும் வளாகத்தில், அவர்களின் செயலாளர்களைவிட இடைத்தரகர்கள்தான் அதிகமாக சுற்றிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் எல்லாத் திட்டங்களும் நிறைவேறுகின்றன. தற்போது வியாபாரிகள், விற்பனையாளர்கள், தொழில் முனைவோர்களிடம் கேட்டால், இணையதளத்தில் அப்ளை பண்ணினால் போதும். எங்களுக்கு உடனடியாக ஆர்டர் கிடைத்துவிடுகிறது என்று சொல்கிறார்கள்.

இதனால், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொன்று, மக்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. இவ்வளவு பணத்தை கொடுத்தால்தான் தொழில் செய்ய முடியும் என்ற நிலையில், நியாயமான நிறுவனமாக இருந்தால் நமக்குக் கிடைக்கும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 4 லட்சம் போலி நிறுவனங்களை மோடி அரசு ஒழித்துக்கட்டியிருக்கிறது. வருமானவரி கட்டுபவர்கள், இரண்டு மடங்காகி இருக்கிறார்கள்.

தமிழிசை
தமிழிசை

லஞ்சம்தானே, அது இருக்கிறதுதானே... என்ற நிலை மாறி, லஞ்சலாவண்யம் இல்லாத ஆட்சி நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. பணத்தைக் கொடுத்து உடனே வாங்கிவிடலாம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது என்றால், பிறந்த குழந்தையிலிருந்து. எல்லா இடங்களிலும் கமிஷன். ஊழல் இல்லாத நிர்வாகத்தைக் கொடுப்பது எவ்வளவு சிரமம். ஒரு சின்னப் பொறி இருந்தால்கூட வெளியில் வந்துவிடும்.

'ரஃபேல்... ரஃபேல்' என்றார்கள். ரஃபேல் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது. சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை விதிமுறைகளை மீறிப் பயணிப்பவர்கள் அதிகம். இந்த விதிமுறைகளைக் கடினப்படுத்திய பிறகும் கண்காணிப்பு கேமரா வைத்தபிறகும், சென்னை அண்ணா நகரில் மட்டும் ஒருநாளைக்கு 90 ஆயிரம் பேர் பிடிபட்டனர். ஆனால், இந்த 90 ஆயிரம் பேர் எப்படி தப்பித்துப் போனார்கள். இதுகுறித்து நான் யாரையும் குறைசொல்லவில்லை.

தமிழிசை
தமிழிசை
இன்றைய தேர்தலில், எங்களைப்போன்ற வேட்பாளர்களிடம் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று மக்கள் கேட்கிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மனதுக்கு வருத்தமாக உள்ளது.
தமிழிசை

பணம் வைத்திருப்பவர்கள், மிகவும் உயர்ந்த தளத்தில் இருக்கிறார்கள். மற்ற வேட்பாளர்கள் ஜெயிக்க முடியவில்லை. அதிக பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிற அரசியல்வாதிகள், இவ்வளவு பணத்தை நான் செலவு பண்ணினால்தான் அடுத்த தேர்தலைச் சந்திக்க முடியும் என்று நினைக்கிறார்கள். வெற்றி என்பது பணத்தின் அடிப்படையில் வருகிறது என்பதை நினைக்கும்போது, நல்ல வேட்பாளர்கள் ஜெயிக்க முடியவில்லையே என்கிற மனவருத்தம் ஏற்படுகிறது" என்றார்.