Published:Updated:

போர் தீவிரமடையும் முன்பே... தோல்விக்குத் தயாராகிறதா தமிழகம்?

மாஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
மாஸ்க்

கேள்விக்குள்ளாகும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு!

போர் தீவிரமடையும் முன்பே... தோல்விக்குத் தயாராகிறதா தமிழகம்?

கேள்விக்குள்ளாகும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு!

Published:Updated:
மாஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
மாஸ்க்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதைச் செய்கிறோம், அதைச் செய் கிறோம் என, தொடர்ச்சியாக ஏதாவ தொன்றைச் சொல்லிக்கொண்டே இருக் கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால், அதற்கான பலன் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் கடந்த வாரம் வரை இரண்டாவது நிலையில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாம் நிலையான சமூகப் பரவலின் ஆரம்பக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; நோய் பரவாது’ என நாம் நினைத்துக்கொண்டிருக்கையில், தமிழகம் மூன்றாவது நிலையின் தொடக்கத்துக்குச் சென்றுவிட்டதாக எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது, எங்கே தவறு நிகழ்கிறது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம். “வீட்டில் இரு - விலகி இரு - தனித்து இரு என்ற சொல்லிய நம் அரசாங்கம், களத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டுகொள்ளாமல்விட்டதுதான் பிரச்னைகளுக்குக் காரணம். தங்கள் நலனைவிடவும் மக்கள் நலனே முக்கியம் என நினைத்து, மக்களுக்காகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் அத்தனை பேரின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிசெய்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, மருத்துவப் பணியாளர்களுக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். நோய் பரவு தலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் ஊரடங்கின் நோக்கம். ஆதலால், நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

போர் தீவிரமடையும் முன்பே... தோல்விக்குத் தயாராகிறதா தமிழகம்?

நோய்த்தொற்று மிகுந்திருக்கும் நாடுகள் செய்த முதல் தவறு மருத்துவப் பணியாளர்களை கவனிக்காமல்விட்டதுதான். இந்தியாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது. இதில் எட்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை இத்துடன் நிற்காது. இந்த எண்ணிக்கை மருத்துவர்களுக்கானது மட்டும்தான். ‘மருத்துவர் அல்லாத மருத்துவத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட கொரோனா தடுப்பில் முதல் நிலைப் பணியாளர்களில் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தரவு நம்மிடம் துல்லியமாக இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடம் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு இல்லை என்பதுதான் நிதர்சனம். அடிப்படைத் தேவையான மாஸ்க்குகள்கூட போதுமான அளவு இல்லை. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவர்களுக்குத் தரப்பட வேண்டிய ‘என் - 95’ மாஸ்க்குகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடாத மாஸ்க்கை, `ஐந்து நாள்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்துங்கள்’ என்று சொல்லியிருக்கிறது எய்ம்ஸ். இதெல்லாம் ஆபத்தான போக்கு” என்றார்.

பொது மருத்துவரான ராதா, “தொற்று உறுதிசெய்யப்பட்ட மருத்துவர்களில் பெரும் பாலானோர் கொரோனா வார்டில் வேலை செய்யாத மருத்துவர்கள். கிராமத்துக்குள் வேலை செய்துகொண்டிருந்த அந்த மருத்துவர்கள், எங்கிருந்து தொற்றைப் பெற்றார்கள் என்பதைக் கண்டறிவது அவசியம். இதெல்லாம் ஒருபுறமிருக்க, களத்தில் நிற்போருக்குத் தரப்படும் பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் தரம்வாய்ந்ததாக இல்லை. ஆனால், சீனாவில் களத்தில் இருக்கும் அனைவருக்கும் தரமான பாதுகாப்புக் கவசங்கள் தரப்பட்டன. அதுதான் நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் மிகப்பெரிய பங்குவகித்தது. இங்கு ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது வழங்கப்படும் கவசங்கள்தான் பெருவாரியாக விநியோகிக்கப்படுகின்றன. ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் வழியாகப் பரவும். ஆனால், கொரோனா அப்படியா? அரசு, முறையான உபகரணங்களை உடனடியாக விநியோகிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், அடுத்த ஒரு மாதத்தில் கூடுதலாக 3,000 புதிய நோயாளிகள் வரக்கூடும். பிரச்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது நம் பணியாளர்களின் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும். அவர்கள் எல்லோரும் நம் போர் தளபதிகள். முதல் நிலையிலேயே நம் தளபதிகளை இழப்பது, போர் தீவிரமடையும் முன்னரே தோல்விக்குத் தயாராவது போன்றது. மத்திய அரசு இதை உணர்ந்து, ஒவ்வொன்றுக்கும் தன்னையே எதிர்பார்க்க வைக்காமல் மாநில அரசுகளிடம் பொறுப்பை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

போர் தீவிரமடையும் முன்பே... தோல்விக்குத் தயாராகிறதா தமிழகம்?

தமிழக அரசு சார்பில் ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகள் வந்ததும், அவற்றை முதல் நிலைப் பணியாளர்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்த வேண்டும்’ என்றும் மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சாந்தி - ராதா
சாந்தி - ராதா

அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் பேட்டி கொடுக்கும்போது, “எல்லாமே சரியாக இருக்கிறது. மருத்துவப்பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இருக்கின்றன” என்றே ஓயாமல் முழங்குகிறார்கள். ஆனால், உண்மை என்னவோ பல் இளிக்கத்தான் செய்கிறது. அரசு கொடுப்பதாகச் சொல்லும் ‘பாதுகாப்பு கவசங்களை’ மீறியும் மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதே அதற்கு சாட்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism