Published:Updated:

புதிய டிஜிட்டல் விதிகள்: ஐ.நா விடுத்த வேண்டுகோள்; இந்திய அரசின் பதில்!

"புதிய டிஜிட்டல் கொள்கைகளினால் தனியுரிமை மற்றும் கருத்துரிமை பறிக்கப்படும் என்ற கருத்து முழுவதும் தவறான புரிதலையே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்திருக்கிறது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிய டிஜிட்டல் கொள்கைகள் தொடர்பாக பல சர்ச்சைகளை நாளுக்கு நாள் சந்தித்து வருகிறது இந்தியா. முதலில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள், புதிய டிஜிட்டல் கொள்கைகளுக்கு உடன்படத் தாமதித்தது, வாட்ஸ்அப் நீதிமன்றத்தை நாடியது என பல பிரச்னைகளைச் சந்தித்தது இந்தியா. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமும் (UNHRC) புதிய டிஜிட்டல் கொள்கையில் இருக்கும் விதிகள் தொடர்பாகக் கேள்விகளையும், தங்கள் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.

Social media
Social media

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரிவு கடந்த ஜூன் 11-ம் தேதி, இந்தியாவில் அமலாகியிருக்கும் புதிய டிஜிட்டல் கொள்கையில் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. 1979-ல் Civil and Political Rights-ன் கீழ் உருவாக்கப்பட்ட தனியுரிமை, பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கான தரநிலைகளை இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் தற்போது அமலாகியிருக்கும் புதிய டிஜிட்டல் கொள்கைகள் அந்த தனியுரிமை மற்றும் கருத்துரிமைக்கான சர்வதேச தரநிலையுடன் ஒத்துப்போகவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. புதிய கொள்கைகள் குறித்து பலதரப்பட்ட மக்களுடனும், நிறுவனங்களுடனும் கலந்தாலோசனை செய்யவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தவறான தகவல்களைப் பரப்பியது தொடர்பாக 1000 கணக்குகளை முடக்க கோரிய தகவல் தொழில்நுட்பத்துறையின் முடிவுக்கும் கவலை தெரிவித்திருக்கிறது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்.

`டூல்கிட்' விவகாரம்: விசாரிக்கப்பட்ட ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி, யார் இவர்?

"இந்த புதிய கொள்கைகளால் அதிகாரம் இருப்பவர்கள் தங்கள் தனிநபர்களின் கருத்துரிமை பறிக்க வாய்ப்பு இருக்கிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களும் இதனால், தங்கள் கருத்துரிமையை இழப்பார்களோ என்ற கவலை எழுகிறது" எனத் தெரிவித்திருக்கிறது மனித உரிமைகள் ஆணையம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்துள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், "புதிய டிஜிட்டல் கொள்கைகளினால் தனியுரிமை மற்றும் கருத்துரிமை பறிக்கப்படும் என்ற கருத்துமுழுவதும் தவறான புரிதலையே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

Meity
Meity

மேலும், "சமூக வலைத்தளங்கள் தவறான வழிகளில் பயன்படுத்துவதைத் தடுப்பது தற்போது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. போலியான தகவல்களைப் பரப்புதல், சமூக ஒற்றுமையைச் சீர்குலைப்பது போன்ற கருத்துக்களைப் பகிர்தல், குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறை என சமூக வலைத்தளங்களும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது அவசியம். இது சட்டம் அது போலக் குற்றம் இழைப்பவர்களுக்கானது மட்டுமே. இந்த சட்டம் தொடர்பாக 2018-லேயே மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம், அதன் பிறகே இந்தச் சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது" எனவும் பதிலளித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு